Kidny

Kidny

சிங்கள இனவாதிகளைக் கைது செய்யும் பொலிசாரின் நடவடிக்கை ஒர் ஏமாற்று வித்தை


சிங்சிங்கள இனவாதிகளைக் கைது செய்யும் பொலிசாரின் நடவடிக்கை ஒர் ஏமாற்று வித்தை என்பதை இன்னும் சில நாட்களில் புரிந்து கொள்ள முடியும்.

முஸ்லிம்கள் விடயத்தில் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணம் இந்த அரசாங்கத்திற்கு அறவே இல்லை என்பதை கடந்த காலங்களில் இந்த டேன் பிரியசாத் என்ற இனவாதிக்கு எதிராக நான் பொலிஸ் தலைமையகத்தில் செய்த முறைப்பாடுகளின் பின்னர் உணர்ந்து கொண்டேன்.

கல்கிஸ்ஸ சம்பவத்தின் காரணமாக கைது செய்யப்பட்டுள்ள இனவாதிகளுக்கு எதிராக பொலிசார் மிகவும் இலேசாக பிணையில் வெளிவர வாய்ப்பு வழங்கும் 
சட்டங்களின் கீழேயே வழக்குகளை பதியப்பட்டிருப்பதாக அறிய வருகிறது.
கல்கிஸ்ஸ நீதிமன்றில் இது தொடர்பாக ஆர்ஆர்ரி RRT சட்டத்தரணிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஐசிசிஆர்பி ICCRP என்ற சட்டத்தின் கீழ் பதிய வேண்டிய வழக்கை பொலிஸார் வேறு இலகுவான சட்டத்தின் கீழ் பதிந்திருப்பதை சட்டத்தரணிகள் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

நான் கடந்த வாரம் திட்டமிடப்பட்ட குற்றங்களை தடுக்கும் பிரிவிற்கு வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக சென்றிருந்தேன். டேன் பிரசாத்திற்கு எதிராக நான் பொலிஸ் தலைமையகத்தில் செய்த முறைப்பாடு தொடர்பாகவே இந்த பிரிவிற்கு நான் அழைக்கப்பட்டிருந்தேன்.

அங்குள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரின் உடல் மொழியை உணர்ந்தக்கொண்ட நான் அவர்களிடம் '' நான் இதுவரை மூன்று முறை உங்களிடம் இந்த இனவாதிகள் தொடர்பாக வாக்குமூலம் வழங்கியுள்ளேன். இன்னும் எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதற்கு காரணம் என்ன?'' என வினவினேன்.

நாங்கள் உங்களது முறைப்பாடு தொடர்பாக சட்டமா அதிபர் அலுவலகத்தின் சட்ட உதவியை நாடியிருக்கிறோம். அவர்களின் அறிவுருத்தல் வந்ததும் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்வோம் என்று பதிலளித்தனர். உங்கள் சட்டமா அதிபரின் அறிவுருத்தல் வரும் போது இந்த நாடு ஒரு பிணக்காடாய் மயானமாய் மாறிவிடும் என்று கோபமாய் கூறிவிட்டு எனது வாக்குமூலத்தை வழங்கினேன்.

அங்கிருந்த பொலிஸார் நான் ஏதோ டேன் பிரியசாத் என்பவனுக்கு போலியாக குற்றச்சாட்டை சுமத்தியது போல் என்னிடம் வினா தொடுத்தனர்.

இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கும் மஹிந்தவின் அரசாங்கத்திற்கும் இடையே எவ்வித வேறுபாடும் கிடையாது.

இந்த ஆட்சிக்கு நல்லாட்சி என்ற பெயரை விட 'சிங்கள ஆட்சி' என்ற பெயரே சாலப் பொருந்தும். சிரீ லங்கா பொலிஸ் என்ற பெயரை விட 'சிங்கள பொலிஸ்' என்ற பெயரே சாலப் பொருந்தும்.

மைத்திரி மற்றும் ரணிலின் ஆலோசனையின் அடிப்படையில்தான் பொலிசார் ஒரு பக்கச் சார்பாக செயற்படுகின்றனர்.

தற்போதைய கைதுகள் கூட சர்வதேசத்தை ஏமாற்ற மைத்திரி ரணில் கூட்டு செய்யும் சதியே தவிர வேறில்லை என்பதே எனது கருத்து.
சிங்கள இனவாதிகளைக் கைது செய்யும் பொலிசாரின் நடவடிக்கை ஒர் ஏமாற்று வித்தை சிங்கள இனவாதிகளைக் கைது செய்யும் பொலிசாரின் நடவடிக்கை ஒர் ஏமாற்று வித்தை Reviewed by Madawala News on 10/02/2017 12:14:00 PM Rating: 5