Yahya

ஏமாளி சமூகமாக முஸ்லிம் சமூகம் இருப்பது மிகவும் மனவேதனையை தருகின்றது.


நேர்காணல் இக்பால் அலி 

ஆளும் தரப்பிலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள்  மாகாண அரசியல் சீர் திருத்தம் சம்மந்தாக தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளனர். இது பற்றி நீங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள்


ஆளும் தரப்பு முஸ்லிம் அரசியல்வாதிகள் சம்மந்தமாக கூறுவதென்றால் ஒரே இரவில் முஸ்லிம்களின் எதிர்காலத்தை தனது பதவிகளுக்காக சோரம் போன துரோகிகள் என்றே சொல்ல வேண்டும். அன்று பிரபாகரன் காலத்தில் நடந்த ஆட்சியின் படி இவர்களுக்கு கொடுக்கும் தண்டனை என்னவென்றால் மின்சாரக் கம்பங்களில் தூக்கப்பட வேண்டியவர்கள். அந்த 21 வெட்கம் கெட்ட அரசியல்வாதிகள் ஆவர். இவர்கள் செய்த துரோகம் போதாமைக்கு வெளியில் வந்து வெறும் வீராப்பு பேசி இன்னும் முஸ்லிம்களை ஏமாற்றும் நுட்பங்களை காட்டுகின்றனர். அந்தளவுக்கு ஏமாளி சமூகமாக முஸ்லிம் சமூகம் இருப்பது மிகவும் மனவேதனையை தருகின்றது. இந்த விடயத்தில் ஜம்மிய்யதுல் உலமா போன்ற பொறுப்பு வாய்ந்த அமைப்புகள் கூட  மௌனமாக இருப்பது இலங்கை முஸ்லிம்கள் யாரை நம்புவது என்ற கேள்விக்குறியாக உள்ளது


மாகாண சபை சீர்த்திருத்தில் நீங்கள் காணும் பிழை என்ன


இலங்கையிலுள்ள மாகாணங்களில் முஸ்லிம் முதல் அமைச்சர் என்ற அந்தஸ்து எங்களுக்கு கிடைத்தது இந்த நாட்டு முஸ்லிம் அரசியல்வாதிகளின் கெட்டித் தனத்தாலோ அல்லது இலங்கையின் முஸ்லிம்களை வழிநடத்தும் தஹ்வா அமைப்புக்களின் வேண்டு கோளாலோ அல்ல. சுயாட்சி கேட்டு போராடி பல்லாயிரக் கணக்கான உயிர்களை கொடுத்த தமிழ் மக்களின் தியாகத்தாலும் அன்று ஒன்றிணைக்கப்பட்டிருந்த வடகிழக்கு மாகாண சபையை தனது அரசியல் சாதூரியத்தால் இரண்டாகப் பிரித்து அன்று ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அதற்குரிய  அழுத்தத்தை கொடுத்து கிழக்கு மாகாண மூத்த அரசியல்வாதி முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவையுமே சாரும்


இருந்தாலும்  இப்படியாகக் கிடைத்த இந்த முஸ்லிம்களுக்குரிய அமானிதமான அந்தஸ்தை ஒரே இரவில் இல்லாமல் ஆக்கிய சம்பவம் இலங்கை வரலாற்றில் முஸ்லிம் அரசியல்வாதிகள் மனசாட்சியின்றி செய்த பெரும் வரலாற்று பிழையாகும். இது சம்மந்தமாக எதிர்காலத்தில் எத்தனை சாக்குப் போக்குகள் சொல்வதற்கு இந்தப் பிரேரணையை கொண்டு வந்த அமைச்சர் பைசர் முஸ்தபாவோ இன்று முக்கிய இரு முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களான அமைச்சர் ரவூப் ஹக்கீமோ அல்லது ரவூப் ஹக்கிமை விமர்சித்து தன்மை முஸ்லிம்களின் நியாயமான தலைவர் என்று வீராப்பு பேசும் ரிசாட் பதியுத்தீனோ அல்லது நல்லாட்சி மூலம் முஸ்லிம்களை மீட்க வந்த முஜிபுர்ரஹ்மானோ இவர்களுடன் அரசாங்கத்துக்கு வக்காளத்து வாங்கும் ஏனைய பாராளுமன்ற பிரநிதிகளோ  முயற்சி செய்தாலும் இது வடக்கு கிழக்கை மீண்டும் ஒரே மாகாண சபையின் கீழ் ஒன்றிணைப்பதன் மூலம் அந்த மாகாணங்களில் முஸ்லிம் சமூகத்தை சிறுபான்மையாக்க அன்று இருந்து திட்டம் தீட்டும் தமிழ் டயஸ்போரா அல்லது சுமந்திரனின் தந்திரத்திற்கு தன்னை தாரைவார்த்தது மறுக்க முடியாத உண்மையாகும்.  


ரோஹிங்கியா அகதி வெளியேற்றிய சம்பவத்தின் பின்னணியில் கூட்டு எதிர்கட்சி செயற்பட்டதாக சந்தேகங்கள் உள்ளன. இது சம்மந்தமாக நீங்கள் கூறுவது என்ன


இன்று இந்த நாட்டில் ஒடுக்கப்பட்ட அல்லது ஏமாற்றப்பட்ட மக்களுக்காக இனம் மதம் பேதமின்றி மனசாட்சியோடு இயங்கும்  ஒரு அரசியல் தரப்பு என்றால்  அது சரியானதாகும். கூட்டு எதிர்கட்சி சம்மந்தமாக எதிர் நோக்குடன் அல்லது மனக் கசப்புடன் எங்கள் கூடுதலானவர்கள் பார்ப்பதும் கூட்டு எதிர்கட்சியை விட்டு முக்கியமாக முஸ்லிம்கள் தூரத்தில் இருப்பதாலும் கூட்டு எதிர்கட்சியின் நடவடிக்கைகள் நோக்கங்கள் அறியாமையினால் அது பற்றி சந்தேகப்படுவது இயல்பாகும்கூட்டு எதிர்கட்சியை வழிநடத்தும் முன்னாள ஜனாதிபதி இந்த சம்பவம் தொடர்பாக  தனது பலத்த எதிர்ப்பை தெரிவித்துள்ளார்


இந்த நாட்டுக்கு அகதிகளாக வரும் எந்த நாட்டைச் சார்ந்தவர்களையும் அல்லது எந்த மதத்தைச் சார்ந்தவர்களையோ நாம் நல்மனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்அதற்குரிய சர்வதேச சட்டதிட்டங்களுக்கு நாம் உடன்பட்டவர்களாக மட்டும் அல்லாமல் நாம்  புத்த பிரானின் வழியில் வந்த பௌத்தவர்களாகிய நாங்கள் கருணையுள்ளவர்களாக  மனட்சாட்சியுள்ளவர்களான நடந்து கொள்ள வேண்டும் எனவும் தான் ஆட்சி செய்த காலங்களில் இரண்டு முறை ரோஹிங்கியாவில் இருந்து வந்த அகதிகளையும்  ஏற்றது மட்டுமல்லாமல் அவர்களை  பாதுகாப்பான முறையில் பராமரித்து அவர்களுக்கு உரிதான நாடுகளில் சென்று வாழும் வரையில் அவர்களை நாட்டில் எந்தவித பிரச்சினையுமின்றி வைத்துக் கொண்டதையும் சுட்டிக் காட்டினார்


அதனால் இன்று அரசாங்கத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் எந்த அரசியல் அதிகாரமும் இல்லாத மஹிந்த ராஜப்கஷவையோ அல்லது அவர் சார்ந்த கூட்டு எதிர்கட்சியையோ குற்றம் சாட்டுவதை விட்டு விட்டு அரச தரப்பு முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம் விடயங்களில் அக்கறை செலுத்த வேண்டும்.  


இது சம்மந்தமாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் இதன் மூலம் அரசாங்கம் நியாயத்தை நிலைநாட்ட வில்லையா


இந்தக் கைதின் மூலம் முஸ்லிம்களின் கண்கள் துடைக்கப்பட்டுள்ளதா அல்லது உண்மையிலேயே  நீதி நிலை நாட்டப்பட்டுள்ளதாக என்பதை இன்னும் சில தினங்களில் இந்த நாட்டின் அரசாங்கத்தின் கீழ் இயங்கும் சட்டத்தை பாதுகாக்கும் அல்லது நீதியை நிலை நாட்டுவதற்காக இந்த நாட்டில் இயங்கும் இடங்களில் கொடுக்கப்படும் தீர்ப்புக்கள் மூலம் நியாயத்தை தெரிந்து கொள்ளலாம். இந்த இனவாதப் பிரச்சினைகளை தடுக்கும் அல்லது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்குரிய சட்டங்கள் நாட்டில் அமுல் இருந்தாலும்  சாதாரண விடயங்களில் அல்லது  குற்றத்தடுப்புக்கு உட்படாத சட்ட மூலங்கள் மூலம் இதில் சம்மந்தப்பட்டவர்களை  விடுதலை செய்வதன் மூலம்  நியாயங்கள் நிலை நாட்டப்படுவதில்லை


இந்த நாட்களில் மீண்டும் பள்ளிவாசல்கள் தாக்குதல்கள் இடம்பெறுகின்றன. இவைகளுக்கு முடிவு இல்லையா?  


இலங்கை முஸ்லிம்களை பூச்சாண்டிகாட்டும் விடயத்தில் நல்லாட்சி அரசாங்கத்திற்கும் எமது அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் நிகர் அவர்களே


இதுவொரு புதுமைக்குரிய நாடாகும். இதில் இருக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் புதுமையிலும் புதுமைக்குரியவர்கள். ஏனென்றால் ராமனின் அரசாங்கத்திலும் இவர்கள் அமைச்சர்கள் இராவணனின் அரசாங்கத்திலும் இவர்கள் அமைச்சர்கள். இவர்களுக்கு அரசாங்கம் பலம் இல்லாத எதிர்கட்சியில் இருப்பது இவர்களின் அரசியலுக்கோ அல்லது சொகுசுக்கோ ஒவ்வாதது. முஸ்லிம் சமூகம் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. எத்தனை பள்ளிகள் உடைக்கப்பட்டாலும் பரவாயில்லை.முஸ்லிம்களின் தலையில் இடி விழுந்தாலும் பரவாயில்லை. முஸ்லிம்களின் வாயில் மண் விழுந்தாலும் பரவாயில்லை. இவர்கள் எல்லா அரசாங்கத்திலும் அமைச்சர்கள். இந்த நிலைமைகள் மாற வேண்டும்


இலங்கை முஸ்லிம்களுக்குரிய புதிய முஸ்லிம் அரசியல் சிந்தனைகள் உருவாக வேண்டும். எல்லாக் காலங்களிலும் காலவாதியான முஸ்லிம் அரசியல்வாதிகளை பதவிக் கொண்டு வரும் இலங்கையில் முக்கியமான புத்திஜீவிகள் சிந்தனையாளர்கள் பலர் இருந்தாலும் இந்த அரசியலுக்குள் அவர்கள் வராமல் இந்த மனசாட்சி இல்லாதவர்களை பதவிக்குக் கொண்டு வந்து அமானிதமான முஸ்லிம்களின் பொறுப்புக்களை கொடுத்து இந்த நாட்டு முஸ்லிம்கள் இழந்தவைகள் போதும். இனிமேலும் நாங்கள் இந்த நாட்டில் கௌரவப் பிரஜைகளாக தலை நிமிர்ந்து வாழ்வதற்கு இறைவன் உதவி செய்ய வேண்டும்

ஏமாளி சமூகமாக முஸ்லிம் சமூகம் இருப்பது மிகவும் மனவேதனையை தருகின்றது.  ஏமாளி சமூகமாக முஸ்லிம் சமூகம் இருப்பது மிகவும் மனவேதனையை தருகின்றது. Reviewed by Madawala News on 10/09/2017 08:09:00 PM Rating: 5