Kidny

Kidny

எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டாமென ஐ.ஓ.சியிடம் அரசு கோரிக்கை

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலையை அதிகரிக்கப் போவதில்லை எனத் தெரிவித்திருக்கும் பெற்றோலிய
வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டாம் என ஐ.ஓ.சி நிறுவனத்திடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டிய தேவை இருந்தாலும், மக்கள் மீது மேலும் சுமையை அதிகரிக்கும் வகையில் தீர்மானம் எடுக்கப்படக் கூடாது என்பதே தமது நிலைப்பாடு என்றும் அவர் கூறினார். எரிபொருள் விலையை அதிகரிக்கப் போவதாக ஐ.ஓ.சி நிறுவனம் அறிவித்துள்ளமை குறித்து கருத்துக் கேட்டபோதே அமைச்சர் இதனைக் கூறியிருந்தார்.
எரிபொருள் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் ஐ.ஓ.சி நிறுவனம், நிதி அமைச்சருடன் கலந்துரையாடியிருப்பதுடன், என்னுடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. எனினும், தற்போதைக்கு எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டாம் என அரசாங்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளோம். அதனையும் மீறி அவர்கள் விலையை அதிகரித்தால், அரசாங்கம் என்ற ரீதியில் தீர்மானம் எடுக்க வேண்டி ஏற்படும் என்றார். நஷ்டத்தை எதிர்கொண்டாலும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் நடந்துகொள்ள வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் அவர் குறிப்பிட்டார்.
"அதேநேரம்,விலையை அதிகரிக்க வேண்டும் என அரசாங்கமும் தீர்மானிக்குமாயின் அதற்கமைய நடக்கவேண்டி ஏற்படும்" என்றும் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க சுட்டிக்காட்டினார்.
ஐ.ஓ.சி நிறுவனத்தினர் விலையை அதிகரிப்பதற்கு அதிகாரம் உள்ளது. இருந்தபோதும் மக்களுக்கு சுமையை கூட்டும் வகையில் விலையை அதிகரிப்பதா என்பதை அவர்கள் தீர்மானிக்க வேண்டும். அவர்களுக்குத் தேவையானவற்றை எமது நாட்டுக்குள் வந்து செய்வதாயின் அதில் பிழை உள்ளது. நாட்டில் அரசாங்கமொன்று இருப்பதால் அதற்கான தீர்மானத்தை அரசாங்கம் எடுக்க வேண்டும்.
எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டாமென ஐ.ஓ.சியிடம் அரசு கோரிக்கை  எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டாமென ஐ.ஓ.சியிடம் அரசு கோரிக்கை Reviewed by Madawala News on 10/06/2017 09:50:00 AM Rating: 5