Kidny

Kidny

தமிழ் ஊடகங்களில் அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் சிங்கள ஊடகங்களில் அரசை புகழ்கின்றனர் – இம்ரான் எம்.பி


தமிழ் ஊடகங்களில் அரசாங்கத்தை விமர்சிக்கும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள்  சிங்கள ஊடகங்களில்
அரசை புகழ்கின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

புதன்கிழமை காலை கிண்ணியாவிலுள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் ,

இந்த நாட்டில் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களாகிய நாம் உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பல வெள்ளை வேன்களை கடந்து ஆட்சிமாற்றம் ஒன்றை ஏற்படுத்தி ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறோம். அதில் ஒரு முக்கிய அத்தியாயமே அரசியல் அமைப்பு மாற்றமாகும். இந்த அரசியல் அமைப்பு மாற்றத்தை ஜனநாயக வழியில் ஏற்படுத்த பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம்.

இதற்காகவே ஐக்கியதேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் எமக்கு கிடைக்க வேண்டிய அமைச்சு பதவிகள் மற்றும் வரப்பிரசாதங்களை விட்டுகொடுத்து நல்லாட்சியை ஏற்படுத்தியுள்ளோம்

நல்லாட்சியை ஆதரித்து ஒரு கூட்டம் கூட போடாதவர்கள் நல்லாட்சியை எதிர்த்து பிரச்சாரம் செய்தவர்கள் இன்று அமைச்சர்களாக உள்ளனர். நாம் நினைத்திருந்தால் இந்த கூட்டாட்சியை கலைத்து  தனியே ஆட்சி அமைத்து அமைச்சர்களாக வளம் வரலாம். ஆனால் ஒரு புதிய  இலங்கையை உருவாக்க எமது அமைச்ச் பதவிகளை தியாகம் செய்துள்ளோம்.

இவ்வாறான நிலையிலேயே வழக்கு கிழக்கை மையமாக கொண்ட அரசின் பங்காளி கட்சிகள் தம்மை சமுதாயத்தின் காவலர்களாக மக்களிடம் காண்பிக்க ஐக்கியதேசிய  கட்சியையும் எமது தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் சேறு பூசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அரசியல் அமைப்பு மாற்றத்தின் மூலம் ரணில் விக்ரமசிங்க முஸ்லிம்களுக்கு துரோகம் செய்யவுள்ளதாகவும் பிரசாரத்தை முன்னெடுக்கின்றனர்.

ஆனால் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஏசும் இந்த அமைச்சர்களே சிங்கள ஊடகங்களில் எமது பிரதமரையும் இந்த அரசாங்கத்தையும் புகழ்கின்றனர். அரசாங்கம் எமது சமூகத்துக்கு துரோகம் இழைப்பதாக கூறும் இவர்கள் ஏன்  அதை சிங்கள ஊடகங்களின் முன்னால் சொல்வதில்லை.

இந்த அரசியல் அமைப்பில் முஸ்லிம்களுக்கு துரோகம் இழைக்கப்படின் அதை தடுக்கவேண்டிய பொறுப்பு இவர்களுக்கே உண்டு. இவர்கள்தான் அரசியல் அமைப்பு குழுவில் அங்கம் வகிக்கின்றனர் ஆனால் இவர்கள் அங்கோ அமைச்சரவையிலோ வாய் துறப்பதில்லை. அவர்கள் வாய் துறப்பதெல்லாம் அவர்களின் சலுகைகளை பெறுவதற்காக மட்டுமே.

எனது கட்சிக்கு இத்தனை அமைச்சு வேண்டும். எங்களுக்கு இத்தனை திணைக்களங்கள் வேண்டும் அமைச்சின் இணைப்பாளர்கள் வேண்டும் என்பன மட்டுமே இவர்களால் அரசிடம் கேட்கப்படுகின்றன. இதனாலேயே இவர்களால் அரசியலமைப்பு குழுவிலோ அமைச்சரவையிலோ எமது உரிமைகளுக்காக பேச முடியாதுள்ளது.

இவ்வாறு எமது சமூகத்தை விற்றுப்பிழைக்கும் இந்த முஸ்லிம் கட்சிகள் தமக்கு கிடைக்கும் வாய்ப்புக்களை தவறவிட்டுவிட்டு இறுதியில் ஐக்கிய தேசிய கட்சியின் மேல் பழிபோடுகின்றனர்.
ஆகவே இவர்களிடம் நான் ஒன்றை மட்டு கூறி கொள்ள விரும்புகிறேன் உங்களுக்கு தைரியம் இருந்தால் நீங்கள்  தமிழ் ஊடகங்களில்  ஐக்கியதேசிய கட்சி  பிரதமருக்கு எதிராக வெளியிடும் கருத்துக்களை துணிவிருந்தால் சிங்கள ஊடகங்களில் தெரிவித்து பாருங்கள் என தெரிவித்தார்.

ஊடகப்பிரிவு

தமிழ் ஊடகங்களில் அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் சிங்கள ஊடகங்களில் அரசை புகழ்கின்றனர் – இம்ரான் எம்.பி  தமிழ் ஊடகங்களில் அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் சிங்கள ஊடகங்களில் அரசை புகழ்கின்றனர் – இம்ரான் எம்.பி Reviewed by Madawala News on 10/25/2017 02:55:00 PM Rating: 5