Ad Space avaiable

ரதனசார தேரரை தீவிரமாக தேடிவருகிறோம் : பொலிஸார் தெரிவிப்பு..


அரம்பபொல ரதனசார தேரரை தங்களால் இதுவரை கைது செய்ய முடியவில்லை என பொலிஸார் நீதி மன்றில்

குறிப்பிட்டுள்ளனர்.


மியான்மர் அகதிகளுக்கு இடையூரு விளைவித்த குழுவின் மிக்கிய நபராக செயற்பட்ட அரம்பபொல ரதனசார தேரர் சீ சி டி யிற்கு அழைக்கப்பட்ட நிலையில் அவர் அங்கு சமூகமளிக்காமல் தலைமறைவாகி இருந்தார்.


இந்த நிலையில் அவரை தாங்கள் தேடி வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


மியன்மார் அகதிகளுக்கு இடையூறு விளைவித்ததாக குற்றச்சாட்டி கைது செய்யப்பட்டு இன்று 9 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  அக்மீமன தயாரத்ன தேரர், டான் பிரியசாத்  உட்பட 7 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை நீடிக்கபட்டுள்ளது.


கடல்மார்க்கமாக இலங்கைக்கு வந்த மியன்மாரைச் சேர்ந்த 30 ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் நீதிமன்றத்தின் உத்தரவின்படி கல்கிசையில் உள்ள வீடொன்றில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.


குறித்த ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் தங்கியிருந்த வீட்டுக்கு முன்னால் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அதில் கலந்து கொண்ட  முக்கிய  புள்ளிகள் கைதாகி   இன்று 9 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  நிலையில் திர்வரும் 16 ஆம் திகதி வரை அவர்களின் விளக்கமறியல் நீடிக்கபட்டுள்ளது.

ரதனசார தேரரை தீவிரமாக தேடிவருகிறோம் : பொலிஸார் தெரிவிப்பு..  ரதனசார தேரரை தீவிரமாக தேடிவருகிறோம் : பொலிஸார் தெரிவிப்பு.. Reviewed by Madawala News on 10/10/2017 08:23:00 AM Rating: 5