Ad Space avaiable

அரச ஊழியர்களுள் ஐவரில் ஒருவர் மனநோயாளி ..


அரசாங்க நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுள் ஐவரில் ஒருவர் மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என  சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.


அழுத்கம, மொர கல்ல பிரதேசத்தில் நேற்று (10) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரை யாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்


சுகாதார அமைச்சில் மனநல நோய் தொடர்பில் தனியானதொரு பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, அரசாங்க ஊழியர்கள் ஐவரில் ஒருவருக்கு மனநோய் காணப்படுவது தெரியவந்துள்ளது


வீட்டிலும் தொழிலிடங்களிலும் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளே அதற்குரிய காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது


கடந்த காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் மனநோயா ளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் அவர் குறிப் பிட்டார்


ஒவ்வொரு வருடத்திலும் ஒக்டோபர் 10ஆம் திகதி உலக மனநல தினம் அனுஷ்டிக்கப்படுவதுடன் குறித்த தினத்தை முன்னிட்டு நாம் சுமார் 25 வருடங்களாக பல்வேறு நிகழ்ச்சிகளையும் செயற்திட்டங்களையும் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அரச ஊழியர்களுள் ஐவரில் ஒருவர் மனநோயாளி ..  அரச ஊழியர்களுள் ஐவரில் ஒருவர் மனநோயாளி .. Reviewed by Madawala News on 10/11/2017 08:59:00 AM Rating: 5