Ad Space avaiable

கிண்ணியா நகரசபை பிரதேச சபை எல்லைகள் மறுசீரமைக்கப்படவுள்ளது- இம்ரான் எம்.பி




 

கிண்ணியா நகரசபை பிரதேச சபை எல்லைகள் மறுசீரமைக்கப் படவுள்ள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்  இம்ரான் மகரூப் தெரிவித்தார். திங்கள்கிழமை காலை பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார்


அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் ,


கடந்த பல மாதங்களாக  நான் மேற்கொண்டு வந்த தொடர் நடவடிக்கைகளின் பயனாக கிண்ணியா நகர சபை பிரதேச சபை எல்லைகளை மறுசீரமைக்கப்படவுள்ளது. கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவு 146.9 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டது. இதில் வரும் நகரசபை 17 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் பிரதேச சபை 14 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.


எனினும் நகரசபை சுமார் 9 சதுர கிலோமீற்றர் பரப்பளவினுள் மட்டுமே உள்ளடக்கப்பட்டுள்ளது. இதனால் நகர சபைப் பகுதியில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள அரச காணிகள் இல்லாத நிலை காணப்படுகின்றது. இது எதிர்காலத்தில் இப்பகுதியில் பாரிய சிக்கல்களைத் தோற்றுவிக்கும்.


எனவே இதனை நிவர்த்திக்கும் பொருட்டு இந்த இரு சபைகளின் எல்லையில் இருக்கும் உப்பாறு கிராம உத்தியோகத்தர் பிரிவை இரண்டாகப் பிரித்து அதன் ஒரு பகுதியை கிண்ணியா நகர சபையின் எல்லையுடன் இணைக்க வேண்டும். உப்பாறு கிராம உத்தியோகத்தர் பிரிவு பெருமளவு நிலப்பரப்பைக் கொண்டுள்ளதால் இது சாத்தியமான விடயம்.


ஆகவே இது தொடர்பாக உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை பிரதேச மற்றும் மாவட்ட அபிவிருத்தி கூட்டங்களில் முன்வைத்து அதன் அனுமதியுடன் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக உள்ளூராட்சி மற்றும் மாகாணசபை அமைச்சர் பைசல் முஸ்தபாவுடன் கலந்துரையாடி உடனடியாக இதை நிறைவேற்றி தருமாறு கோரிக்கை விடுத்தேன்.


அதன்பயனாக அமைச்சர் திருகோணமலை மாவட்ட செயலாளருக்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய இது தொடர்பாக ஆராய மாவட்ட செயலாளர் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.


இன்ஷா அல்லாஹ் பல வருடகாலமாக எமது மக்களின் முக்கிய கோரிக்கையாக காணப்படும்  கிண்ணியா நகர சபை மற்றும் பிரதேச சபைகளின் எல்லைகளின்  மறுசீரமைப்பு  மிக விரைவில் செயலுருவம் பெறும்.

 

ஊடகப்பிரிவு

கிண்ணியா நகரசபை பிரதேச சபை எல்லைகள் மறுசீரமைக்கப்படவுள்ளது- இம்ரான் எம்.பி கிண்ணியா நகரசபை பிரதேச சபை எல்லைகள் மறுசீரமைக்கப்படவுள்ளது- இம்ரான் எம்.பி Reviewed by Madawala News on 10/09/2017 01:30:00 PM Rating: 5