Ad Space avaiable

ஜனாதிபதி பொது மன்னிப்பு பெற திரைமறைவில் முயற்சி ?


நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை வழங்கப்பட்டால் ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என ஞானசார தேரர் தரப்பு ஜனாதிபதியிடம் கோரியுள்ளதாக கொழும்பு அரசியல் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.



ஹோமாகம நீதி மன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ள பொதுபல சேனா ஞானசார தேரருக்கு குறித்த வழக்கில் சிறை தண்டனை வழங்கப்படும் சாத்தியம் உள்ளதாக கூறப்படும் நிலையில் அவர் தரப்பினரால் ஜனாதிபதியிடம் ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


குறித்த கோரிக்கைக்கு பதில் அளித்துள்ள ஜனாதிபதி தரப்பு ஞானசார தேரருக்கு உள்ள இதர வழக்குகளை இயன்றளவு முடித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த விடயத்தை கருத்தில் கொண்டு மிக அண்மையில் ஞானசார தேரர் தரப்பு முஸ்லிம் பிரதிநிதிகள் சிலரை சந்தித்து சமரசம் பேச முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக ஊர்ஜிதமான தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஞானசார தேரருக்கு எதிரான முஸ்லிம் தரப்புகளால் மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாடுகளை வாபஸ் பெறவே இந்த சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில் இதனை பொது பல சேனா தரப்பு மறுத்துள்ளது.


ஞானசார தேரரை ஜனாதிபதி தரப்பு பாதுகாப்பதாக அஸாத் சாலி போன்றவர்கள் குற்றம் சுமத்தியுள்ள நிலையில் அவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என தெரிவிக்கப்படுகிறது.


நான்கு விஷேட பொலிஸ் குழுக்கள் அமைத்து தேடப்பட்ட ஞானசார தேரருக்கு பிணை பெற்றுக்கொள்ள ஜனாதிபதிக்கு மிக நெருக்கமான உலப்பனை சுமங்கள தேரர் களமிறங்கியிருந்த அதேவேளை ஞானசார தேரருடன் ஜப்பான் சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி பொது மன்னிப்பு பெற திரைமறைவில் முயற்சி ?   ஜனாதிபதி பொது மன்னிப்பு பெற திரைமறைவில் முயற்சி ? Reviewed by Madawala News on 10/12/2017 09:34:00 AM Rating: 5