Ad Space Available here

வடக்கு முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்பை ஞாபகப்படுத்தும், கரிய ஒக்டோபர் அவசியம்

எம்.எஸ். முஹம்மத்

இஸ்லாமிய ஹிஜ்ரி ஆண்டு ஆரம்பித்த வருடம் மக்காவில் இருந்து முஹம்மது நபி (ஸல்) அவர்கள்
வெளியேறிய அதாவது ஹிஜ்ரத் செய்த ஆண்டிலிருந்து தான் ஆரம்பிக்கின்றது

 யாழ் முஸ்லிம்களும் வடமாகாண முஸ்லிம்களும் 1990 இல் புலிகள் என்ற தமிழ் ஆயுதக் குழுவால் வெளியேற்றப் பட்டது (கலிமாச் சொன்ன) முஸ்லிம்களாக அவர்கள் இருந்த காரணத்தால் தான்

எனவே இந்த வெளியேற்றத்தை நினைவு கூறுவது ஒவ்வொரு வடபுல முஸ்லிமினதும் கடமையாகும். அவர்கள் உலகில் எப்பாகத்தில் வாழ்ந்தாலும் தமக்கோ அல்லது தமது தாய் தந்தையருக்கோ இழைக்கப் பட்ட அநீதியை உலகரியச் செய்வது அவர்கள் ஒவ்வொருவரினதும் தார்மீகக் கடமையாகும்

வெளியேற்றப் பட்டதற்காக அவர்கள் ஆயுதமேந்திப் போராடியிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்யவில்லை. ஆகக் குறைந்தது கருப்பு ஒக்டோபர் நிகழ்வுகளில் கலந்து கொண்டு அதற்கான பண உதவிகளைச் செய்தாகிலும் ஈமானின் ஒரு சிறுதுளி சரி இருக்கின்றது என்பதை காட்ட வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமையாகும்

முஸ்லிம்கள் இழைத்த அநீதியை மன்னிக்கவும் மறக்கவும் வேண்டும். ஆனால் காபிர்கள் இழைத்த இந்த அநீதியை மன்னித்தாலும் மறக்கக் கூடாது என்பது தான் கடந்த 1439 வருடங்களாக ஹிஜ்ரி ஆண்டுக் கணக்கு நமக்கு ஞாபகமூட்டுகின்றது

எனவே ஜே எம் சி போன்று எந்த அமைப்புகள் இவ்வாறான போராட்டங்களை முன்னெடுத்தாலும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது ஈமானின் ஒரு பகுதியாகும். இதனை எதிர்ப்பதோ அல்லது அவ்வாறு செய்பவர்களை விமர்சிப்பதோ முனாபிக் எனும் நயவஞ்சகத்தன்மைக்கு இட்டுச் செல்லும் என்பது சில மார்க்க அறிஞர்களின் கருத்தாக உள்ளது

இவ்வாறு செய்வதன் மூலம் எதனைச் சாதிக்கலாம் என்று சிலருடைய பல்கீனமான ஈமான் சிந்திக்க வைக்கும். அடக்குமுறைக்கு உள்ளாக்கப் படும் போது அதற்கு எதிர்ப்பு காட்டுவது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும். 1990 ஒக்டோபர் 15 இல்   பொலனறுவ முஸ்லிம் கிராமங்களான அக்பர்புரம் மெதிரிகிரிய  முஸ்லிம் கொலனி போன்ற இடங்களில்  வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை ஒலிபெருக்கி மூலம் பள்ளிவாசலுக்கு வருமாறு அழைத்து நடுநிசி ஒருமணியளவில் கோழைத்தனமாக கொன்று குவித்தது தான் பாசிச புலிகள் செய்த இறுதி கூட்டுப் இனப் படுகொலையாகும்ஏன் அவர்கள் அதன் பின்னர் கூட்டுப் படுகொலைகளை அரங்கேற்றி முஸ்லிம்களைக் கொன்று குவிக்கமுடியாமல் போனார்கள் என்று யாரும் சிந்தித்தது உண்டா

ஆம் 1990 ஒக்டோபர் 15 ஆம் திகதி பொலனறுவையில் 192 முஸ்லிம்களும் 8 சிங்கள் ஊர்காவல் படைவீரர்களும் கோழைத்தனமாக கொல்லப் பட்டதை கண்டித்து 20 ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முஸ்லிம் மாணவர்கள் ஒரு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தார்கள்இந்த ஆர்ப்பாட்டத்தில் சிங்களவரும் ஏன் தமிழர் கள் கூட பங்கெடுத்தார்கள்ஏறக் குறைய 2000 பேர் பங்கு பற்றிய அந்த ஊர்வலம் தான் இலங்கை முஸ்லிம்கள் வரலாற்றில் புலிகளுக்கெதிராக செய்யப் பட்ட முதல் ஆர்ப்பாட்டமாகும். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு இடம்பெற்ற போது விபரங்கள் கூறப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தை மறு நாள் பி.பி.சி மற்றும் சி என் என் என்பன ஒளிபரப்பி இருந்தன. அப்படிச் செய்ததால் என்ன நன்மை என்று சிலர் கேட்கலாம்

அவ்வாறு ஒளிபரப்பப் பட்ட செய்திகளைப் பார்த்த சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் புலிகளின் சர்வதேச தொடர்பாளராக செயற்பட்ட லோரன்ஸ் திலகரை கேள்வி கேட்டு திக்கு முக்காடச் செய்து விட்டனர். சிறு பாண்மை உரிமைக்காக போராடும் தமிழர்கள் ஏன் தமது சிறுபாண்மையான முஸ்லிம்களை கொன்று குவிக்க வேண்டும் என்றும் தங்களின் போராட்டத்தின் உண்மைத்தன்மையில்  தாம் நம்பிக்கையிழந்து விட்டதாகவும் சர்வதேச அமைப்புக்கள் புலிகளுக்கு தெரியப் படுத்தியதனால் தான் புலிகள் தொடர்ந்து கூட்டுப் படுகொலைகளைச் செய்வதைக்  கைவிட்டார்கள்

9 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் முன்னர் யாழின் வடகரையில் சேத்தான் குளம் உசுமன் துறை கீரிமலை மாதகல் சங்கானை போன்ற பிறதேசங்களில் வாழ்ந்து வந்த போது  வடகரைத் துறைமுகத்தில் நிலவிய அவர்களின் ஆதிக்கத்தை அழிப்பதற்கு சதி செய்து இந்தியாவில் இருந்து ஒரு பெரும் படையைக்  கொண்டுவந்து முஸ்லிம்களை அவ்விடத்தில் இருந்து விரட்டினான் அப்பொதைய  சோள அரசன்.  (யாழ்ப்பாண வைபபமாலை பக்கம் - 9, 10) 

பின்னர் 1480 இல் சாவகச்சேரி, ஆனைக்கோட்டை  மற்றும் உசன் போன்ற பிரதேசங்களின் வாழ்ந்த யாவக இனத்திச் சேர்ந்த முஸ்லிம்கள் கனக சூரிய சிங்கை ஆரியனால் வெளியேற்றப் பட்டனர்.  (யாழ்ப்பாண வைபபமாலை )

1744இல் நல்லூரில் இருந்து பன்றிகளை கிணற்றில் குடிக்க நீரின்றி ஆக்கப் பட்டு இந்துக்களால் விரட்டப் பட்டனர். (யாழ்ப்பாண வைபபமாலை )

1990 இல் யாழ்ப்பாணம் சுன்னாகம் மண்கும்பான் சாவகச்சேரி பருத்திதுறை உட்பட  வடமாகாணம் முழுவதும் வாழ்ந்த 84 000 இக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் உடுத்த உடையுடன் அனைத்து நகை பணம் உடைகள் சட்டிபாணைகள்,பீங்காண்கள், கரண்டிகள், அரிசி மாவு சீனி போன்ற உணவுப் பொருட்கள்கதிரைகள் மேசைகள், ஆடுகள் கோழிகள் மாடுகள் தலையணைகள் கட்டில்கள் அலுமாரிகள்  போன்ற அனைத்தையும் கொள்ளையடித்த பின்னர் வெளியேற்றப் பட்டனர். இந்த கொடுங் காரியத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் எனும் பயங்கரவாத ஆயுதக் குழு செய்ய தமிழ் மக்களும் தமிழ் அரசியல் வாதிகளும் வாழாவிருந்தனர்.

தொடர்ச்சியாக காலத்துக்கு காலம் முஸ்லிம்கள் அவர்களின் பூர்வீகப் பிரதேசங்களில் இருந்து வெளியேற்றப் படுவது ஏன்? பலஸ்தீன முஸ்லிம்கள்  இஸ்ரேலிய யூதர்களால் படிப்படியாக வெளியேற்றப் படுவது போன்று வடக்கினதும் கிழக்கினதும் பூர்வீகக் குடிகளாகிய முஸ்லிம்கள் வெளியேற்றப் படுவது ஏன்அரசியல் காய் நகர்த்தல்களில் தமிழ் அரசியல் கட்சிகளை நம்பி நாம் செயற்படலாமா? அவர்களுடன் உடன்படிக்கைகள் செய்ய முடியுமா? அவ்வாறு செய்தால் ஆற்றைக் கடக்க மட்டும் அண்ணன் தம்பி என்ற முதுமொழிக்கு ஏற்ப முஸ்லிம்களாகிய நாம் ஏமாற்றப் படுவோமா என்பத எமது சந்ததிகள் அறிய வேண்டும்

அல் குர் ஆனில் கூட பல இடங்களில் முன்னைய நபிமார்களினதும் அவர்களது  காலத்து மக்கள் பற்றியும் பழைய கதைகள் சொல்லப் படுவது ஏன்? யூதர்களைப் பற்றி பல இடங்களில் கூறப் பட்டுள்ளது ஏன்அப்போது மட்டும் யூதர்கள் அப்படி வாழ்ந்து இப்போது திருந்தி விட்டார்களா? அல்லது தொடர்ந்தும் பழைய ஏக் இறைக் கொள்கைக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றார்களாபழையவற்றை அறிந்து அதில் உள்ள தவறுகளை நாம் செய்யக் கூடாது என்பதற்காகத் தான் பழைய சம்பவங்கள் சொல்லப் படுகின்றன

அதேபோன்று தான் 1990 ஒக்டொபர் 16 ஆம் திகதிக்கும் 30 ஆம் திகதிக்குமிடையில்  இலங்கையின் வடைக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப் பட்ட விடயம் உலக வரலாற்றில் நிகழ்ந்த மிகக் கொடிய சம்பவமாக பதியப் பட்டுள்ளது

இதனை வருட வருடம் உலகில் முஸ்லிம்கள் வாழும் காலமெல்லாம் நினைவுபடுத்தி  மாற்று மதத்தவரின் சூழ்ச்சிகளுக்கும் வஞ்சிப்புகளுக்கும் எதிர்காலத்தில்  முஸ்லிம்கள் ஆளாகிவிடாமல் பாதுகாக்க வேண்டியது அவ்வாறு பாதிக்கப் பட்டவர்களின் பொறுப்பாகும். எனவே யாழ்ப்பாணம், புத்தளம், கொழும்பு , சுவிஸ், பிரான்ஸ், யு.கே ஜேர்மனி அமெரிக்கா கனடா போன்ற நாடுகளில் எங்கு வாழ்ந்தாலும் இந்த வெளியேற்றத்தை நினைவு படுத்துவதன் மூலம் தொடர்ந்து அவ்வாறான செயல்கள் இடம்பெறாமல் தடுப்பதும் எதிர்காலச் சந்ததிகளுக்கு  முஸ்லிம் இனத்தின் விரோதிகள் பற்றிய  எச்சரிக்கை செய்திகளையும் விட்டுச் செல்வதும் ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும்.
வடக்கு முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்பை ஞாபகப்படுத்தும், கரிய ஒக்டோபர் அவசியம்  வடக்கு முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்பை ஞாபகப்படுத்தும், கரிய ஒக்டோபர் அவசியம் Reviewed by Madawala News on 10/27/2017 07:49:00 AM Rating: 5