Yahya

ஒன்றிற்கு மேற்பட்ட மாகாணங்கள் இணைக்கப்பட எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது




ஒன்றிற்கு மேற்பட்ட மாகாணங்கள் இணைக்கப்பட எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது என பாரளுமன்ற அவையில் இளைஞர் பாரளுமன்ற  உறுப்பினர் ஹஸீப் மரிக்கார் தெரிவிப்பு.


ஆசிய பாரளுமன்ற உறுப்பினர்கள் சம்மேளன  உறுப்பினர்கள் கலந்து கொண்ட விசேட பாரளுமன்ற அமர்வு  இன்று நடைபெற்றது. இன்றைய அவையில் புதிய அரசியல் யாப்பு திருத்தம் விவாதத்துக்கு  எடுத்துக்கொள்ளப்பட்டது


இதன்போது உரையாற்றுகையிலே ஹஸீப் மரிக்கார்  இதனை தெரிவித்தார்


மேலும்  தெரிவித்ததாவது, மக்களால் நேரடியாக  தெரிவு  செய்யபடும், பாராளுமன்றுக்கு பொறுப்புக் கூரக்கூடிய ஜனாதிபதி முறைமை இருக்க வேண்டும். மேலும்  அனைத்து  இனங்களும் உள்வாங்கப்பட கூடிய உப ஜனாதிபதிகள் 3 பேர்  நியமிக்கப் பட வெண்டும். பல் இன , பல்  சமய, பல்  மத , பல்  கலாசார மக்கள்  வாழும் இந்நாட்டில்  அனைவரதும் உரிமைகள் பாதுகாக்கப்பட வெண்டும்.


அன்று பயங்கர வாதிகள் முன்வைத்த கோரிக்கையை இன்று ஜனநாயக ரீதியாக அடைய முற்படும் மாகாண இணைப்புக் கோரிக்கைகள் முற்றாக தடுக்கப்பட வெண்டும் எனவும் கூறினார்.

ஒன்றிற்கு மேற்பட்ட மாகாணங்கள் இணைக்கப்பட எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது  ஒன்றிற்கு மேற்பட்ட மாகாணங்கள் இணைக்கப்பட எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது Reviewed by Madawala News on 10/09/2017 06:27:00 PM Rating: 5