Kidny

Kidny

ஆள்மாறாட்டம் செய்த ரதனசாரர் தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்ட தகவல் ..


ரோஹிங்ய அகதிகளை உயிரச்சுறுத்தலுக்குள்ளாக்கிய அரம்பேபொல ரத்னசார நேற்று இரவு கைது
செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடப்பிரிவினர் மடவளை நியுசுக்கு குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்டுள்ள ரத்னசார தேரரிடம் தென்னகோன் முதியன்சலாகே சாமர தென்னகோன் எனும் பெயரிலும் தேசிய அடையாள அட்டையொன்றும் அவர்வசம் இருந்துள்ள அதேவேளை குறித்த அடையாள அட்டை இவ்வருடம் ஏழாம் மாதம் பெறப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றில் வைத்து ரத்னசாரவை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக்ப்பிரிவினர் குறிப்பிட்ட அதேவேளை ரோஹிங்யா அகதிகள் விவகாரம் தவிர இரு அடையாள அட்டைகள் வைத்திருந்தமை தொடர்பிலும் அதனூடாக மோசடிகள் இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பிலும் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவினர் குறிப்பிட்டனர்.

2011ல் ஒரு மதகுருவாக அடையாள அட்டை பெற்றுள்ள ரதனசார தேரர் 2017ல் ஒரு சாமானியர் போல் வேறு அடையாள அட்டை பெற்றுள்ள ரதனசாரருக்கு அடைக்களம் கொடுத்தவர்கள் தொடர்பிலும் விசாரணை முன்னெடுக்கப்படும் அதேவேளை அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

சிங்கலே ஜாதிக பலமுலுவ என்ற அமைப்பின் பிரதான செயற்பாட்டாளார செயறபடும் ரதனசாரர கடந்த காலங்களில்  முஸ்லிம் விரோத பிரசாரங்களில் ஈடுபட்டுவந்தவராவார்.
ஆள்மாறாட்டம் செய்த ரதனசாரர் தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்ட தகவல் ..  ஆள்மாறாட்டம் செய்த ரதனசாரர் தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்ட தகவல் .. Reviewed by Madawala News on 10/20/2017 08:36:00 PM Rating: 5