Kidny

Kidny

விமல் வீரவங்ச – ஜனாதிபதிய இன்று மாலை விசேட சந்திப்பு


தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.


ஜனாதிபதியின் கொழும்பிலுள்ள உத்தியோகபுர்வ வாசஸ்தலத்தில் இந்த சந்திப்பு இன்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


இதன்போது, அரசாங்கத்தினால் கொண்டுவரவுள்ள புதிய உத்தேச அரசியல் யாப்பில் காணப்படும் இனத்துக்கும், பௌத்த சமயத்துக்கும் நாட்டுக்கும் ஏற்படப் போகும் ஆபத்துக்கள் குறித்து ஜனாதிபதிக்கு விளக்கமளித்ததாக விமல் வீரவங்ச எம்.பி. கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.


இதன்போது, சகல தகவல்களும் அடங்கிய எழுத்து மூல கடிதம் ஒன்றும் ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.  


விமல் வீரவங்ச – ஜனாதிபதிய இன்று மாலை விசேட சந்திப்பு  விமல் வீரவங்ச – ஜனாதிபதிய இன்று மாலை விசேட சந்திப்பு Reviewed by Madawala News on 10/11/2017 11:27:00 PM Rating: 5