Kidny

Kidny

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் அம்பாரை மாவட்ட அங்கத்துவ வை.எம்.எம்.ஏ. களின் தலைவர், செயலாளர்களுக்கான விசேட ஒன்று கூடல்


அம்பாரை மாவட்ட பணிப்பாளர் -கே.எல்.சுபைரின்முயற்சியினால் அகில இலங்கை வை.எம்.எம்.. பேரவையின்
அம்பாரை மாவட்ட அங்கத்துவவை.எம்.எம்.. களின் தலைவர்இசெயலாளர்களுக்கான விசேட ஒன்று கூடல் நிகழ்வுபணிப்பாளர் கே.எல்.சுபைரின் தலைமையில்கல்முனை அல்தாப் ஹோட்டலில் (.எப்.சி)நடைபெற்றது.

சாய்ந்தமருதுஇ சம்மாந்துறை வை.எம்.எம்.. கிளைகளின் அனுசரணையும் வழிநடாத்தலிலும் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பேரவையின் வரலாற்றில் முதல் தடவையாக கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியத்தலைவர் தேசபந்து எம்.என்.எம். நபீல் அவர்களும் கௌரவ அதிதியாக பேரவையின் தேசிய பொதுச் செயலாளர் ஸஹீட் எம். றிஸ்மியும்  விசேட அதிதிகளாக பேரவையின் போதைப்பொருள் தடுப்புதிட்ட தவிசாளர்  எஸ்.தஸ்தகீர் பேரவையின் தலைமைத்துவமும் பயிற்சியும் மற்றும் இளைஞர் வலுவட்டலுக்குமான திட்ட தவிசாளர் பிரபல சமூகசேவையாளர் யூ.எம். பாஸீல் ஆகியோரும் கிளை அங்கத்தவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிழ்வின்போது அம்பாரை மாவட்டத்தில் அகிலஇலங்கை வை.எம்.எம்.. பேரவை ஊடாகமக்களுக்கு செய்யப்படவுள்ள பல்வேறுவேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் மற்றும் கிளைவை.எம்.எம். களின் செயற்திட்டங்கள் சவால்கள்தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.

  தற்போதுள்ள தேசிய பிரச்சினையான கல்விக்கல்லுாரிகளுக்கான நியமனங்களின்போது கிழக்குமாகாண டிப்ளோமாதாரிகள் பலரை (ஆண் பெண்இரு பாலாரையும்) வெளி மாவட்டங்களுக்கு  நியமித்தமை தொடர்பில் பேரவையின் கவனத்திற்குகொண்டுவரப்பட்டதுடன் இது தொடர்பாக  கல்விஅமைச்சர் மற்றும் செயலாளர்களின் கவனத்திற்குகொண்டு வருவதாக பேரைவையின் தலைவர்செயலாளர்கள் உறுதியளித்தனர்

அதுமாத்திரமல்லாமல் இது விடயத்தில்பாதிக்கப்பட்டோர் உடனடியாக பேரவையின்  acymmac@gmail.com மின்னஞ்சல் முகவரியுடனும் செயலாளரின்   0777391691 என்ற தொலைபேசி இலக்கத்துடனும்  உடனடியாகத் தொடர்புகொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்

அதுபோல் பிரிதொரு பிரச்சினையான மௌலவிஆசிரியர் பிரச்சினை தொடர்பாகவும் ஆராயப்பட்டது. இதில் கிழக்கு மாகாண மௌலவிமார் முற்றாக புறக்கணிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டது. இவ்வாறு பாதிப்புக்குள்ளானவர்களும் உடனடியாக தொடர்புகொள்ளுமாறும் அவசர வேண்டுகோள்விடுக்கப்பட்டுள்ளது.


இங்கு தேசிய பேரவையின் சார்பில் தேசியத்தலைவர் எம்.என்.எம். நபீல் பொதுச் செயலாளர் ஷஹீட் எம்.றிஸ்மி மற்றும்  பேரவையின் போதைப்பொருள் தடுப்பு திட்ட தவிசாளர்  எஸ்.தஸ்தகீர் அம்பாரை மாவட்ட பணிப்பாளர்கே.எல்.சுபைர் ஆகியோர் கிளை அங்கத்தவர்களால் நினைவுச் சின்னம் வழங்கி பொன்னாடை போர்த்திகௌரவிக்கப்பட்டனர்.

மேலும் விசேடமாக கல்முனை கிளைத் தலைவர் மௌலவி எச்.எம். ஹாறூன் அவர்களின் புதல்வன் முஹம்மத் அன்சித் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தமைக்காக நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் அம்பாரை மாவட்ட அங்கத்துவ வை.எம்.எம்.ஏ. களின் தலைவர், செயலாளர்களுக்கான விசேட ஒன்று கூடல்  அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் அம்பாரை மாவட்ட அங்கத்துவ வை.எம்.எம்.ஏ. களின் தலைவர், செயலாளர்களுக்கான விசேட ஒன்று கூடல் Reviewed by Madawala News on 10/22/2017 03:16:00 PM Rating: 5