Kidny

Kidny

அக்மீமன தயாரத்ன தேரருக்கு  பிணை


கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு  விளக்கமறியலில்  வைக்கப்பட்டிருந்த அக்மீமன தயாரத்ன தேரருக்கு கல்கிசை நீதவான் நீதி மன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது.


கடல்மார்க்கமாக 30 ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் இலங்கை நோக்கி வந்த நிலையில் நீதிமன்ற தீர்ப்பின் படி அவர்களை கல்கிசையில் உள்ள வீடொன்றில் தங்க வைக்கப்பட்டனர்


இந்நிலையில் அவர்கள் தங்க வைக்கப்பட்ட வீட்டிற்கு முன்னாள் பிக்குகள் உட்பட சிலர் வன்முறையில் ஈடுபட்டதுடன் அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறும் கோஷம் எழுப்பினர்.


இதையடுத்து அவர்களின் பாதுகாப்புக் கருதி பொலிஸார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியதுடன் பூஸா தடுப்பு முகாமில் கொண்டுசென்று அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டது.


குறித்த கல்கிசை வீட்டிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  பெண்ணொருவருவரையும் அக்மீமன தயாரத்ன தேரர் உட்படபேரையும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 

அக்மீமன தயாரத்ன தேரருக்கு  பிணை அக்மீமன தயாரத்ன தேரருக்கு  பிணை Reviewed by Madawala News on 10/10/2017 05:32:00 PM Rating: 5