Kidny

Kidny

யாழ் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களின் கல்வி நடவடிக்கைகளும் இடை நிறுத்தப்பட்டடுள்ளது


பாறுக் ஷிஹான்-

யாழ் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களினதும்  கல்வி நடவடிக்கைகளும்
இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதன் படி  பல்கலைக்கழகத்திற்குள் உட்செல்லவும் மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு  விடுதிகளில் உள்ள மாணவர்களையும் நாளை(1)  மாலை 4 மணிக்கு முன்னதாக வெளியேறுமாறும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு பகிஸ்கரிப்பு போராட்டத்தை தொடர்வதாக அறிவித்துள்ளனர்.
யாழ் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களின் கல்வி நடவடிக்கைகளும் இடை நிறுத்தப்பட்டடுள்ளது யாழ் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களின் கல்வி நடவடிக்கைகளும் இடை நிறுத்தப்பட்டடுள்ளது Reviewed by Madawala News on 10/31/2017 01:16:00 PM Rating: 5