Kidny

Kidny

ஹரீஸ் எம்பியின் ஊர்ப் பற்றை பாராட்டாமல் இருக்க முடியவில்லை



சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் தொடர்பான மிகப் பெரும் போராட்டம் சென்று கொண்டு இருக்கும் நிலையில் நான்கு பிரதேச சபைகளாகவன்றி கல்முனை மாநகர சபையை பிரிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் மிக திடகாத்திரமாக உள்ளார். இவரின் இத் திடகாத்திரமான கருத்தை அவர் வெளிப்படையாக கூறி வருகின்றமையே இங்கு கவனிக்கத்தக்கது.


அவர் வெளிப்படையாக கூறுவதன் மூலம் சாய்ந்தமருது மக்களின் முழுமையான எதிர்ப்பை சம்பாதிப்பார். இது அவருக்கும் தெரியும். இருந்தாலும் அதனை அவர் சிறிதேனும் கவனத்தில் கொள்ளவில்லை. அவர் எடுத்திருக்கும் முடிவு சரியா பிழையா என்பதற்கு அப்பால் தனது கொள்கையை மிக வெளிப்படையாக முன்னெடுத்து வருகிறார். இதனை அவர் வெளிப்படையாக முன்னெடுக்காது வாக்குகளை கருத்தில் கொண்டு ஒரு அரசியல் வாதியாக மறைந்து செயற்பட்டிருக்கலாம். ஹரீஸ் அரசியல் வாதியல்ல. ஒரு சமூகவாதி.


சாய்ந்தமருது அனைத்து கட்சிகளிலும் அங்கம் வகிக்கும் அரசியல் வாதிகளை பாருங்கள். ஒருவர் கூட இந்த விடயத்தில் முன்னின்று களத்தில் நின்று போராடுவதாக இல்லை. இதற்கு எதிர்காலத்தில் கல்முனை மக்களின் வாக்குகளை பெற முடியாது என்ற ஒரு விடயம் பிரதான காரணம். ஆனால், சாய்ந்தமருது வாக்குகளை தான் இழப்பேன் என அறிந்தும் அதனை கருத்தில் கொள்ளாது போராடுகின்றார். அதுவே கொள்கை வீரனுக்குரிய அழகாகும்.


இனி சாய்ந்தமருது ஹரீசுக்கு எதிராக மாறும் அதே நேரம் கல்முனை ஹரீசின் கோட்டையாக மாறும். இதன் பின்னும் இவருக்கு கல்முனை பூரணமாக ஆதரவளிக்காது போனால் அவர்கள் துரோகிகள். ஹரீஸ் தூய முஸ்லிம் காங்கிரஸ் பக்கம் பாதை எடுத்துக்கொண்டிருக்கின்றார். அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் மு.கா அம்பாறையில் இருந்து துடைத்து வீசப்படுவதட்கான அனைத்தும் நடந்தேறிக்கொண்டிருக்கின்றன.


குறிப்பு: இங்கு நான் ஹரீசின் ஊர்ப் பற்றையும் கொள்கை மீது கொண்ட அவரது போராட்ட பண்பையும் பாராட்டுகிறேனே தவிர அவரது கொள்கை சரியானதா அல்லது பிழையானதா எனக் கூறவில்லை


*துறையூர் .கே மிஸ்பாஹுல் ஹக்*

*சம்மாந்துறை.*

ஹரீஸ் எம்பியின் ஊர்ப் பற்றை பாராட்டாமல் இருக்க முடியவில்லை  ஹரீஸ் எம்பியின்  ஊர்ப் பற்றை பாராட்டாமல் இருக்க முடியவில்லை Reviewed by Madawala News on 10/30/2017 11:02:00 PM Rating: 5