Kidny

Kidny

நாம் பெறுப்பேற்றதை போன்ற ஒரு கடன்சுமையை முன்பு ஆட்சியிலிருந்த எந்தவொரு அரசாங்கமும் எதிர்கொள்ளவில்லை..



எதிர்வரும் வரவு செலவுத் திட்டம் மக்களுக்கான நிவாரணங்களை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்தி
இலக்குகளுடன் கூடிய வரவு செலவுத் திட்டமாக இருக்கும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாத்தாண்டிய மாதிங்கல என்ற பிரதேத்தில் நவஉதாகம்மான என்ற வீடமைப்பு திட்டத்தின் கீழ் 43ஆவது கிராமமான அசோகபுர என்ற கிராமம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.

இது தொடர்பான நிகழ்வின் போது இந்த பிரதேசத்தில் தரம் 5இல் சிறப்பு பெறுபேறை பெற்ற வீடற்ற மாணவர் ஒருவருக்கு வீடொன்றை நிர்மாணிப்பதற்காக செவன நிதியத்தின் கீழ் நிதியுதவி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பிரதமர் உரையாற்றுகையில்,

எதிர்வரும் வரவு செலவுத் திட்டம் மக்களுக்கு நிவாரணமளிக்கும் அபிவிருத்தி இலக்குகள் மீது கவனம் செலுத்தும் வரவு செலவுத் திட்டமாக இருக்கும்.

எதிர்வரும் 2 வருட காலப்பகுதியில் கடன்தொகையில் 3இலட்சம் கோடி ரூபாவை திருப்பி செலுத்தக்கூடியதாக இருக்கும் என்றும் இதனை செலுத்தக்கூடிய நடைமுறை இம்முறை வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் முன்மொழியப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பாரிய கடன்சுமையுடன் நாட்டை பெறுப்பேற்ற சமகால நல்லாட்சி அரசாங்கம் இந்த கடன்சுமையிலிருந்து மீளவில்லை என்றும் தெரிவித்த பிரதமர் இதனால் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் சிரமங்கள் நோக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

2018ம், 2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை அமைச்சர் மங்கள சமரவீரவே தயாரிப்பார். தற்போது செலுத்த வேண்டிய கடனை அடுத்த பரம்பரையிடம் ஒப்படைத்துவிட்டு இந்த அரசாங்கம் செல்லப் போவதில்லை . கடனை செலுத்துகின்ற போதிலும் அபிவிருத்தி இலக்குகளையும் அதற்கு இணைவாக மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் நம்பிக்கை வெளியிட்டார்.

இத்தகைய ஒரு கடன்சுமையை முன்பு ஆட்சியிலிருந்த எந்தவொரு அரசாங்கமும் எதிர்கொண்டிருக்கவில்லை என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். பொதுமக்களுக்கு வசதிகளை செய்வதுடன் நாட்டின் அபிவிருத்தியையும் , முதலீட்டிற்கான சந்தர்ப்பங்களையும் மேற்கொண்டு தொழில்வாய்ப்புக்களை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை சமகால நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவம் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.
நாம் பெறுப்பேற்றதை போன்ற ஒரு கடன்சுமையை முன்பு ஆட்சியிலிருந்த எந்தவொரு அரசாங்கமும் எதிர்கொள்ளவில்லை..  நாம் பெறுப்பேற்றதை போன்ற ஒரு கடன்சுமையை முன்பு ஆட்சியிலிருந்த எந்தவொரு அரசாங்கமும் எதிர்கொள்ளவில்லை.. Reviewed by Madawala News on 10/19/2017 10:13:00 PM Rating: 5