Kidny

Kidny

இந்தியாவின் 5 மாநிலங்களுடன் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தவும் நடவடிக்கை


நாட்டின் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதன் மூலம் பொருளாதாரத்தை
வலுப்படுத்த முடியும் என்று பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புகளை வழங்க வருமான வழிகளை உருவாக்குவது அவசியமாகும். முதலீட்டாளர்கள் எதிர்நோக்கும் தடைகளை நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். கடன் சுமையற்ற நாடாக இலங்கை மாற்றியமைக்கப்பட வேண்டுமென்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

ஆசிய அபிவிருததி வங்கி தயாரித்த இலங்கையின் பொருளாதாரம் - 2017 என்ற நூலின் வெளியீட்டு விழாவில் பிரதமர் உரையாற்றினார். 

நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடாந்து உரையாற்றுகையில்  கொழும்பு, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதன் மூலம் நாட்டை வலுவான முறையில் முன்னெடுத்துச் செல்ல முடியும். 

எதிர்வரும் 25 ஆண்டுகளில் மீள் ஏற்றுமதி மத்திய நிலையமாக இலங்கையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 5 மாநிலங்களுடன் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறினார். 
இந்தியாவின் 5 மாநிலங்களுடன் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தவும் நடவடிக்கை  இந்தியாவின் 5 மாநிலங்களுடன் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தவும் நடவடிக்கை Reviewed by Madawala News on 10/28/2017 02:38:00 PM Rating: 5