Kidny

Kidny

ஞானசாரருக்கும், டன் பிரியசாத்துக்கும் மன்னிப்பா..?? முஸ்லிம் சட்டத்தரணிகள் கவலை


பௌத்த சிங்கள இனவாதிகளான ஞானசாராவுக்கும்இ டன் பிரசாத்திற்கும்  பொது மன்னிப்பு வழங்கப்பட
வேண்டுமென்ற கோரிக்கை முஸ்லிம்களின் சில தரப்புகளில் இருந்து எழுந்துள்ள நிலையில்இஅதுகுறித்து முஸ்லிம் சட்டத்தரணிகள் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

பொதுபல சேனாவுக்கும்இ சில முஸ்லிம் தரப்புக்கும் இடையே தற்போது பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன.

ஞானசாரர் நீதிமன்ற வழக்குகளில் சிக்கியுள்ள நிலையில்இ அவருக்கு  மன்னிப்பு வழங்கும் முயற்சியாகவே  இந்தப் பேச்சில் ஞானசாரர் பங்கேற்பதாக சில தரப்பினரால் விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது.

முஸ்லிம் சட்டத்தரணிகள் தியாகம் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பௌத்த இனவாதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடி வழக்குத் தொடர்ந்துள்ளனர். மாறிமாறி பதவிக்கு வந்த அரசாங்கங்கள் பௌத்த இனவாதிகளை கண்டுகொள்ளாத நிலையில் முஸ்லிம் சட்டத்தரணிகளே பௌத்த சிங்கள இனவாதிகளுக்கு சவால் விடும்வகையில் செயற்படுகின்றனர்.

பௌத்த சிங்கள இனவாதிகள் தமது கொட்டத்தை இன்று  ஓரளவு அடக்கிக்கொண்டு இருப்பதற்கு முஸ்லிம் சட்டத்தரணிகளும் முக்கிய காரணமாகும்.

டன் பிரியசாத்திற்கு ஏற்கனவே நீதிமன்றத்தில் முஸ்லிம் சட்டத்தரணிகள் பிணையில் தளர்வு போக்கை கடைபிடித்தமையால்இ டன் பிரசாத் வெளியே வந்தான்இ சிலவாரங்கள் அமைதியாக இருந்த போதிலும் பின்னர் அவனது இனவாத நடவடிக்கைகள் எல்லைத்தாண்டி சென்றது.

தற்போது மீண்டும் டன் பிரசாத் நீதிமன்றத்தில் கம்பிகளை எண்ணியபடி இருக்கையில்இ அவனது மனைவி முஜிபுர் ரஹ்மனை சந்தித்துடன் பிரசாத்தின் விடுதலைக்கு உதவும்படி மன்றாடியுள்ளார்.

இதனையடுத்து முஸ்லிம் சமூகத்திலுள்ள சிலர்  டன் பிரசாத்திற்கு விடுதலை வழங்கும்படியும் அதற்கு முஸ்லிம் சட்டத்தரணிகள்  உதவ வேண்டுமெனவும் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையிலேயே முஸ்லிம் சட்டத்தரணிகளின் கவலையும் வெளியிடப்பட்டுள்ளனர்.

ஞானசாரர் மற்றும் டன்பிரசாத் விவகாரத்தில்   முஸ்லிம்கள் தமக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை குறித்த 2 பௌத்த இனவாதிகளுக்கும் மன்னிப்பு வழங்கும்படியும் இந்த மன்னிப்பினால்தான் சிங்கள - முஸ்லிம் நல்லிணக்கம் வளர்ந்துவிடும் இல்லாதவிடத்து முஸ்லிம் சட்டத்தரணிகள்தான் தேசிய ஒற்றுமைக்கு குந்தகம் போன்ற விசமப் பிரச்சாரங்களை தவிர்க்குமாறு முஸ்லிம் சட்டத்தரணிகள் தரப்பில் உருக்கமான வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

-ஜப்னா முஸ்லிம்-
ஞானசாரருக்கும், டன் பிரியசாத்துக்கும் மன்னிப்பா..?? முஸ்லிம் சட்டத்தரணிகள் கவலை   ஞானசாரருக்கும், டன் பிரியசாத்துக்கும் மன்னிப்பா..?? முஸ்லிம் சட்டத்தரணிகள் கவலை Reviewed by Madawala News on 10/28/2017 09:44:00 PM Rating: 5