Kidny

Kidny

அதிகார பகிர்வின் மூலமே தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்


அதிகார பகிர்வின் மூலமே தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்று விளையாட்டு துறை அமைச்சரும்
அமைச்சரவை துணைப் பேச்சாளருமான தயசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பாராளுமன்றத்தின் மீது குண்டு தாக்குதல் நடத்தப்போவதாக கூறுபவர் இதற்கு முன்னர் பாராளுமன்ற கட்டடம் மீது குண்டு தாக்குதல் நடத்தியவர்களின் உறவினர் என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், இவ்வாறான கடும் போக்காளர்களின் கூற்றுக்கள் தமிழ் மக்களை தனித்து செயற்பட வழிவகுக்கும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் புதிய அரசியல் யாப்பு வரைபு தொடர்பாக செய்தியாளரகள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் முஸ்ஸிம் மக்கள் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கிலும் காணிகளை கொள்வனவு செய்கின்றனர். வழிபாட்டு தளங்களை அமைத்து கொண்டு வாழ்கின்றனர். அவர்களுக்கு என்ன பிரச்சனை உண்டு என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

மற்றுமொரு செய்தியாளர், பிரிட்டிஸ் பாராளுமன்றத்தில் அக்டோபர் மாதம் 12 ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது 40,000 பொது மக்கள் கொல்லப்படவில்லை என்று விவாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசாங்கம் சர்வதேசத்திற்கு தனது கருத்தை தெரிவிக்கவில்லை.

செய்தியாளர் : சமீபத்தில் இலங்கை வந்த .நா.வின் உயர் அதிகாரி இலங்கை தமிழ் மக்கள் தொடர்பில் பலவற்றை செய்யவேண்டும் என கூறி சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் தயசிறி ஜயசேகர : சமீபத்தில் விஜயம் செய்த .நா சபையின் உயர் அதிகாரி அரசின் நல்லிணக்க செயற்பாடுகளை பாராட்டியுள்ளார். அதற்காக அவருக்கு அரசாங்கம் நன்றி தெரிவித்துக் கொள்கின்றது.

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் சிறுப்பாண்மை மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வு முன்னெடுக்கப்படவில்லை. இது மாத்திரமன்றி ஜி.ஜி.பொன்னம்பலம் போன்ற அரசியல் தலைவர் 50 க்கு 50 என்ற அதிகார பகிர்வை வலியுறுத்தி இருந்தனர்.

2000 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட அரசியல் யாப்பை ஐக்கிய தேசிய கட்சி தீயிட்டு கொழுத்தியது. சிறுப்பாண்மை மக்களின் பிரச்சனையை தீர்ப்பதற்காக அரசாங்கங்கள் எடுத்த முயற்சிகளை அமைச்சர் பட்டியலிட்டு காட்டினார்.

ஆனால் தற்போது ஐக்கிய தேசிய கட்சி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஜே.வி.பி போன்ற பல கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்ப்பதில் ஈடுப்பட்டுள்ளனர்.

இப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு இது சிறந்த சந்தர்ப்பமாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் இரா.சம்பந்தனும் சுமந்திரன் போன்றோர் எதிர்ப்புக்கு மத்தியில் தீர்வுக்கான ஆதரவை வழங்கி வருகின்றனர்.

அதேவேளை வடக்கில் உள்ள தமிழ் கடும் போக்காளர்கள் இதற்கு எதிராக செயற்படுகின்றனர். தெற்கிலும் கடும் போக்காளர்கள் இதற்கு எதிராக செயற்படுகின்றனர். இவ்வாறான நடவடிக்கை காரணமாக பிரச்சனை வன்முறை நோக்கியே தள்ளப்படும் என்று அமைச்சர் கருத்து வெளியிட்டார்.

தமிழ் மக்களும் தமது பிரச்சனைக்கு உரிய தீர்வு கிடைக்காத பட்சத்தில் தனித்து செயற்பட இவ்வாறான நடவடிக்கை வழிவகுக்கும்அதனையும் நாம் எதிர் கொள்ளவேண்டும் என்பதை இவ்வாறானோர் யதார்த்தத்தையும் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

புதிய அரசியல் யாப்பு தொடர்பான விடயத்திற்கு இன்னும் இறுதி வடிவம் கொடுக்கப்படவில்லை. இது கருத்துக்கள் ஆலோசனை மட்டத்திலேயே இருந்து வருகின்றன. இந்த முயற்சிகளை சீர்குலைக்காது இந்த புதிய அரசியல் யாப்பு வகுப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அதிகார பகிர்வின் மூலமே தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்  அதிகார பகிர்வின் மூலமே தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் Reviewed by Madawala News on 10/25/2017 04:31:00 PM Rating: 5