Kidny

Kidny

அரசின் வெற்றிப் பயணம் தொடர்பில் தோல்வி கண்ட சக்திகள் ஆவேசம்



சமகால அரசாங்கத்தின் வெற்றிகரமான முன்னேற்றத்தை சகிக்க முடியாத சக்திகள் விரக்தியின் விளிம்பில் ஆவேசம்
கொண்டுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
சமகால அரசாங்கத்தை ஆட்சிபீடத்தில் அமர்த்துவதற்கு பெரும்பாலான மக்கள் வாக்களித்தார்கள். அந்த மக்கள் ஆணையை எவரும் குறைத்து மதிப்பிட முடியாதென்று அமைச்சர் வலியுறுத்தினார்.

சமகால அரசாங்கத்தின் தலைவர்கள் இருவரும் நாட்டின் நம்பிக்கையை வென்றுள்ளார்கள். சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையும் அவர்களுக்கு உண்டு. இருவரும் ஜனநாயக பாதையின் வழியே முன்னேறிச் செல்கிறார்கள் என அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டினார்.

திரு.கோட்டாபய ராஜபக்ஷவின் எதிர்கால அரசியல் நோக்கங்களுக்காக தொடங்கப்பட்ட 'வியக்மக' என்ற இயக்கம் விபத்திற்கான மார்க்கம் என அமைச்சர் குறிப்பிட்டார்.

வெள்ளைவான் கலாசாரத்தின் ஸ்தாபகராக கோட்டாபய ராஜபக்ஷ திகழ்கிறார். அவரது ஒடுக்கு முறை குறித்த எல்லையில்லா கனவுகள் இன்னமும் கலையவில்லை என்று அமைச்சர் மங்கள சமரவீர மேலும் குறிப்பிட்டார்.

அரசின் வெற்றிப் பயணம் தொடர்பில் தோல்வி கண்ட சக்திகள் ஆவேசம்  அரசின் வெற்றிப் பயணம் தொடர்பில் தோல்வி கண்ட சக்திகள் ஆவேசம் Reviewed by Madawala News on 10/26/2017 11:47:00 AM Rating: 5