Kidny

Kidny

உள்ளுராட்சி மன்ற தேர்தல் கட்டளைகளில் சபாநாயகர் கைச்சாத்து


பாராளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட உள்ளுராட்சி மன்ற தேர்தல் சட்ட மூலத்தின் மூன்று
கட்டளைகளில் சபாநாயகர் கரு ஜயசூரிய கைத்திட்டுள்ளார்.

பாராளுமன்ற கட்டிடதொகுதியல் இன்று காலை 10 மணிக்கு இடம்பெற்ற இந்த நிகழ்வில்  மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடாத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளை (13) வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை ஜனவரி மாதத்தில் தேர்தலை நடாத்துவது தொடர்பில் இவ்வறிவித்தல் அமையப் பெறவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அதே நேரம் நாளை காலை 10 மணிக்கு அமைச்சர் பைஸர் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேஷப்பிரிய இடையே விஷேட  சந்திப்பு ஒன்று இடம்பெற உள்ளதாக அமைச்சின் அதிகாரி ஒருவர் மடவளை நியுசுக்கு குறிப்பிட்டார்.
உள்ளுராட்சி மன்ற தேர்தல் கட்டளைகளில் சபாநாயகர் கைச்சாத்து  உள்ளுராட்சி மன்ற தேர்தல் கட்டளைகளில் சபாநாயகர் கைச்சாத்து Reviewed by Madawala News on 10/12/2017 04:39:00 PM Rating: 5