Kidny

Kidny

இலங்கையில் மேற்கொள்ளப்படும் ஜனநாயக மறுசீரமைப்பை பின்லாந்து பிரதமர் ஜுஹா சிபிலா பாராட்டு


இணக்கப்பாட்டு தேசிய அரசாங்கத்தின் கீழ் இலங்கையில் மேற்கொள்ளப்படும் ஜனநாயக மறுசீரமைப்பை பின்லாந்து பிரதமர் ஜுஹா சிபிலா பாராட்டியுள்ளார்.


பின்லாந்து நாடு சுதந்திரமடைந்து 100 வருடங்கள் நிறைவடையும் வேளையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்நாட்டிற்கு விஜயம் செய்துள்ளமை இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு மேலும் வலுவடைவதற்கான வரலாற்று ரீதியான சந்தர்ப்பமாக அமைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்னார்.

 


ஹெல்சிங்கி நகரில் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நேற்று அவர் சந்தித்த வேளையிலேயே இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

 

இரு நாட்டுப் பிரதமர்களுக்கு இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை இதன்போது இடம்பெற்றது


இதன்போது கல்வி, சுகாதாரம், நிலைபேறான எரிசக்தி, டிஜிற்றல்மயம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.


இலங்கையின் தொழில்துறை மறுசீரமைப்புக் குறித்து பின்லாந்தின் அனுபவங்களை பரிமாறிக்கொள்வது தொடர்பாகவும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.


பிராந்திய சமாதானம் மற்றும் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

 

இலங்கை சுதந்திரமடைந்து 70 வருடங்கள் நிறைவடையும் அடுத்த வருடத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பின்லாந்து பிரதமர் ஜுஹா சிபிலாவுக்கு அழைப்புவிடுத்தார்.

 

பின்லாந்தின் எரிசக்தி தயாரிப்பு தொழில்நுட்பத்தை இலங்கைக்கு வழங்குவது தொடர்பிலும் பல்வேறு வர்த்தகங்களுக்காக முதலீடு மற்றும் நிவாரண வட்டியின் கீழான கடனை வழங்குவதற்கும் உடன்படுவது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பின்லாந்து பிரதமர் ஜுஹா சிபிலாவுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

 

இலங்கையில் மேற்கொள்ளப்படும் ஜனநாயக மறுசீரமைப்பை பின்லாந்து பிரதமர் ஜுஹா சிபிலா பாராட்டு  இலங்கையில் மேற்கொள்ளப்படும் ஜனநாயக மறுசீரமைப்பை பின்லாந்து பிரதமர் ஜுஹா சிபிலா பாராட்டு Reviewed by Madawala News on 10/11/2017 10:38:00 AM Rating: 5