Kidny

Kidny

சோழியன் குடுமி சும்மா ஆடுமா ?


சம்பந்தன் ஐயா அவர்கள் வடக்கோடு கிழக்கை எப்படியாவது இணைத்து விட வேண்டும் என்ற காரணத்தினால்
முஸ்லிம்களின் மனதை வெற்றிகொள்வதற்காக பல ஆசை வார்த்தைகளை பேசிவருகின்றார்

அதன் உச்சகட்டமாக இணைந்த மாகாணத்தில் முஸ்லிம் முதலமைச்சரைக்கூட நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று தேனொழுக பேசுவதைப் பார்த்து சிலபேருக்கு புல்லரிப்பு ஏற்படுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

சம்பந்தன் ஐயா அவர்கள் உண்மையிலேயே முஸ்லிம்களின் மீது கருணைகொண்டவராக இருந்திருந்தால், முஸ்லிம்கள் சமீப காலங்களாக இனவாதிகளினால் பாதிக்கப்பட்ட போது, முஸ்லிம்களின் மீது பாசம்கொண்டவர் என்பதற்கு அப்பால்,நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையிலாவது பாராளுமன்றத்திலோ,அல்லது வேறு இடங்களிலோ பேசி தீர்வை பெற்றுத்தந்தாரா? என்ற கேள்விக்கு பதில் இல்லை .

இனவாதிகளினால் முஸ்லிம்களின் கடைகள் எரிக்கப்பட்டபோதும், பள்ளிவாசல்கள் தாக்கப்படும் போதும், மாயக்கல்லில் சிலை வைத்தபோதும், மரிச்சிக்கட்டியை மறித்துக்கட்டிய போதெல்லாம், எதிர்கட்சி தலைவர் என்ற முறையிலும், முஸ்லிம்கள் நமது சகோதரர்கள் என்ற காரணத்தினாலும், ஓங்கி குரல் கொடுக்க மறந்த இந்த சம்பந்தன் ஐயா அண்மையில் ரோகிங்கிய முஸ்லிம் அகதிகள் இனவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கானபோது கூட அரசாங்கத்தை வண்மையாக கண்டிக்கவும் தவறியிருந்தார்.

வடபுல முஸ்லிம்களின் மீழ் குடியேற்ற விடயத்தில் ஒரு கரிசணையும் காட்டாதவர்,
முல்லைத்தீவில் முஸ்லிம் மக்கள் மீள் குடியேறுவதற்கு இன்றும் தடையாக இருப்பவர்கள் அனைவரும் இவருடைய கட்சியைச் சேர்ந்தவர்கள்தான்,அதனைக்கூட தலைவர் என்ற முறையில் தீர்த்து வைப்பதற்கு நாதியற்று இருப்பவர்தான் இவர்.

கல்முனையில் தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் பிரச்சினையை தூண்டிக் கொண்டிருப்பவர்களை இன்றுவரை தட்டிக்கேட்காத இவர் கல்முனையில் முஸ்லிம்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வதற்கு அவருடைய கட்சியைச் சேர்ந்த அடைக்கலநாதன்தான் முன்னின்று செயல்பட்டார், அதனைக்கூட கட்டித்து அதற்கு தீர்வை வழங்க முன்வராதவர்தான் இந்த சம்பந்தன் ஐயா.

அம்பாரையில் நிர்வாக மாவட்டமான கரையோர மாவட்டத்தை பெற விடமாட்டேன் என்று கர்ஜிக்கும் கோடீஸ்வரன் எம்பியை கண்டிப்பதற்கு கூட நாதியற்றவர்தான் இந்த சம்பந்தன் ஐயா.

அஸ்ரப் கொஸ்பிட்டலுக்கு ஒதுக்கப்பட்ட 25 கோடி ரூபா பணத்தை தனது அதிகாரத்தை பயன்படுத்தி பிடுங்கிச் சென்றவர்தான் இந்த சம்பந்தன் ஐயா.

இப்படி பல விடயங்களை நாம் அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

இப்படிப்பட்ட  சம்பந்தன் ஐயா அவர்கள் கிழக்கை வடக்கோடு இணைப்பதற்கு மட்டும் முஸ்லிம்களை தாஜாபண்ணுவதற்காக,முஸ்லிம்களின் மீது பாசங்கொண்டவர்போல் பாசாங்கு காட்டுகின்றார்.
இதற்கு சில முஸ்லிம் தலைவர்களும் ஏமாந்து பின்னால் அலைவதைப்பார்த்து கவலைப்படுவதை தவிர வேறொன்றும் செய்யமுடியாது.

உண்மையிலேயே முஸ்லிம்களின் மீது சம்பந்தன் ஐயா அவர்கள் பாசம்கொண்டவராக இருந்தால் மேற்கூறிய சில விடயங்களிலாவது நியாயமாக நடந்திருக்கலாம் நாம் அவரை நம்புவதற்கு.ஆனால் அவர் தலையைத் திராவி கண்ணைப் புடுங்குவதற்குத்தான் முயற்ச்சிக்கின்றார் என்பதுதான் உண்மையாகும்.இதனை நம்பி முஸ்லிம் சமூகம் ஏமாந்து விடக்கூடாது என்பதே எமது கருத்தாகும்.

எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை.
சோழியன் குடுமி சும்மா ஆடுமா ? சோழியன் குடுமி சும்மா ஆடுமா ? Reviewed by Madawala News on 10/06/2017 12:35:00 PM Rating: 5