Kidny

Kidny

பம்மாத்து அரசியல்




எஸ்.றிபான் -
இலங்கையில் அரசியல் ரீதியாக மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் மாற்றங்கள் தொடர்பில் முஸ்லிம்
அரசியல்வாதிகள் போதிய அக்கறையின்றி இருந்து கொண்டிருக்கின்றார்கள். குறிப்பாக தேர்தல் சீர்திருத்தங்கள் எல்லை நிர்ணயங்கள் ஆகியவற்றில் முஸ்லிம் அரசியல்வாதிகளின் நிலைப்பாடு கண்டிக்கத்தக்கவாறே அமைந்துள்ளது. முழு முஸ்லிம் சமூகத்திற்குமான நலன்களில் கவனம் செலுத்தாது தங்களின் பிரதேசங்களின் விடயங்களிலேயே ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 

அரசாங்கத்தில் பங்காளிகள் என்று கூறிக் கொண்டிருக்கும் முஸ்லிம் கட்சிகள் கூடுதலாக பேரினவாத கட்சிகளின் சதித் திட்டங்களுக்கு துணையாக இருந்து கொண்டிருப்பதூன் முஸ்லிம் சமூகத்திற்கு இருக்கின்ற மிகப் பெரிய ஆபத்தாகும். ஆதலால் முஸ்லிம் சமூகத்தினை முஸ்லிம் அரசியல்வாதிகளினதும் மக்கள் பிரதிநிதிகளினதும் கோணல் புத்தியினால் எற்படவுள்ள ஆபத்திலிருந்து பாதுகாத்தக் கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை முஸ்லிம் புத்திஜீவிகளும் அமைப்புக்களும் மேற்கொள்ள வேண்டும். அண்மைக்காலமாக முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள அரசியல் ரீதியான மாற்றங்கள் குறித்து கூடுதல் கவனத்தை செலுத்திக் கொண்டிருப்பதனை அவதானிக்க முடிகின்றன. இந்தக் கவனம் கூட காலம் பிந்தியதாகவே உள்ளது. ஆயினும் முஸ்லிம் புத்திஜீவிகள் அரசியல் ரீதியாக முஸ்லிம்களின் எதிர்காலத்திற்கு இருக்கின்ற ஆபத்துக்கள் பற்றிய சிந்தனையில் செயல்ரீதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது புத்திஜீவிகள் என்ற அந்தஸ்த்திற்கு உகந்தல்ல.

உள்ளுராட்சி சபைகள்
அரசாங்கம் உள்ளுராட்சி தேர்தலிலும் அதன் எல்லைகளிலும் மாற்றங்களை செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுத்த போது முஸ்லிம் கட்சிகளும்இ மக்கள் பிரதிநிதிகளும் என்ன நடந்தாலும் கவலையில்லை என்ற தோரணையிலேயே இருந்தார்கள். முஸ்லிம்கள் பெருந்தொகையாக வாழும் உள்ளுராட்சி சபைகளை இரண்டாக்கும் நடவடிக்கைகளைக் கூட செய்யவில்லை. சம்மாந்துறை பிரதேச சபையின் எல்லையில் சுமார் 70ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வாழ்கின்றார்கள். நிலப்பரப்பில் கூட பரந்ததாகக் காணப்படுகின்றது. இதனை இரண்டாக்க வேண்டியுள்ளது. இவ்விடயங்களில் மௌனமாக இருந்து விட்டு சம்மாந்துறைக்கு இரண்டு உள்ளுராட்சி சபைகள் தரப்பட வேண்டுமென்ற கோரிக்கையை பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.மன்சூர் மற்றும் ஒரு குழுவினர் தற்போது முன் வைத்துள்ளனர். 

அம்பாரை மாவட்ட முஸ்லிம்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அம்பாரை மாவட்ட முஸ்லிம்களின் விடயங்களில் பேசுவதில்லை. கல்முனையிலும் சாய்ந்தமருதிற்கு தனியான உள்ளுராட்சி சபை தரப்பட வேண்டுமென்று நீண்ட காலமாக கேட்கப்படுகின்றன. இதற்கு கூட அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களினாலோ முஸ்லிம் கட்சிகளினாலோ குறிப்பாக சாய்ந்தமுருதில் அதிக செல்வாக்குப் பெற்றுள்ள முஸ்லிம் காங்கிரஸினாலோ தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படவில்லை. 

இதே வேளை காத்தான்குடி நகர சபையை இரண்டு உள்ளுராட்சி சபைகளாக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

இதே வேளை உள்ளுராட்சி சபைகளின் எல்லை நிர்ணயம்இ தேர்தல் குறித்தும் உள்ளுராட்சி சபையோடு தொடர்புடைய வேறு விடயங்கள் பற்றியும் முஸ்லிம் பிரதிகளும்இ கட்சிகளும் முன் வைத்த கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட அரசாங்கம் அந்த கோரிக்கைகளை நிறைவேற்றாமலேயே உள்ளுராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்ட மூலத்தை  நிறைவேற்றியுள்ளது.  இது போன்ற பல அனுபவங்களைக் கொண்டுள்ள முஸ்லிம் கட்சிகளும்இ பாராளுமன்ற உறுப்பினர்களும் எதனையும் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் யாவும் முஸ்லிம் சமூகத்திற்கு தீங்குளையே அதிகம் கொண்டு சேர்க்கவுள்ளன. இந்நிலையில் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் என்ன செய்து கொண்டிருக்கி;ன்றார்கள்? இவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பியதன் நோக்கமென்ன? நடைபெற்றுக் கொண்டிருக்கும் சீர்திருத்தங்கள் பற்றிய தெளிவினைக் கொண்டர்களாக உள்ளார்களா என்று பல கேள்விகளை கேட்க வேண்டியுள்ளன. 

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்தீருத்தச் சட்டங்கள் பற்றி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளுக்கு ஆள் முரண்பாடான கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். அண்மையில் அம்பாரை மாவட்டத்தில் செல்வாக்குப் பெற்றுள்ள கட்சி ஒன்று உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் பங்குபற்றுவது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றினை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கண்காணிப்பில் நடத்தியது. இதன் போது மாகாண சபை எல்லை நிர்ணயம் மற்றும் தேர்தல் முறை பற்றியும் கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஒருவர் கேட்ட போது நாம் மத்தியில் அமைச்சராக இருக்கும் போது மாகாண சபையைப் பற்றி ஏன் கவலை கொள்ள வேண்டுமென்று தெரிவித்துள்ளார். இதுதான் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் புத்திக் கூர்மையாகும். இந்தப் புத்தியை வைத்துக் கொண்டு முஸ்லிம் சமூகத்தின் எதிர் காலத்தினை சுபிட்சமாக்க முடியாது. 

மாகாண சபை எல்லை நிர்ணயம்
உள்ளுராட்சி சபை தேர்தல் திருத்தச் சட்ட மூலத்திற் முஸ்லிம்கள் அரசாங்கத்தினால் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளின் அக்கறையின்மை புத்திகூர்மை ஆகியவற்றினை வைத்துப் பார்க்கும் போது மாகாண சபைகளின் எல்லை நிர்ணயத்திலும் முஸ்லிம் ஏமாற்றப்படலாம் அல்லது முஸ்லிம் மக்கள் பிரதிகளின் மந்த புத்தியால் அநீதிகள் நடைபெறலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால்தான் முஸ்லிம் சிவில் அமைப்புகள் களத்தில் இறங்குவதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றது. 

அரசாங்கம் மாகாண சபைகளின் தேர்தல் முறையில் திருத்தங்களை மேற்கொள்வதற்குரிய சட்ட மூலத்தினை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. முஸ்லிம் கட்சிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது பூரண ஆதரவை இதற்கு வழங்கியிருந்தன. இதிலுள்ள ஆபத்துக்கள் பற்றி சுட்டிக் காட்டிய போது முஸ்லிம் அரசியல்வாதிகளினால் முன் வைக்கப்படும் கருத்துக்கள் 

சிறுபிள்ளைத்தனமானதாகவே உள்ளன. மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்ட மூலத்தினை நாங்கள் எதிர்ப்பதற்கு இருந்தோம். இறுதி நேரத்தில் முஸ்லிம் காங்கிரஸ் எங்களை காட்டிக் கொடுக்கவும்இ மாகாண சபை தேர்தல் திருத்தச்சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கும் முடிவு எடுத்துக் கொண்டதனால் நாங்களும் வாக்களித்தோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் எங்களிடம் காண்பிக்கப்பட்டதொன்று சட்டவாக்கத்திற்கு கொண்டு வரப்பட்டது வேறொன்று என்று தெரிவித்துள்ளார்கள். 

இவர்களின் கருத்துக்கள் மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்ட மூலத்திற் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன மன நிலையில் இருந்துள்ளார்கள் என்றும் அரசாங்கம் ஏமாற்றியுள்ளதென்றும்இ வாக்களித்து அரசாங்கத்தினை திருப்தியடைச் செய்துவிட்டு முஸ்லிம் சமூகத்தினை திருப்திப்படுத்துவதற்காக பொய்யுரைக்கின்றார்கள் என்றும் புலனாகின்றன.

தொகுதிகளின் எல்லைகள்
தற்போது மாகாண சபைத் தேர்தலுக்குரிய தொகுதிகளின் எல்லைகள் நிர்ணயம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதற்காக சிவில் அமைப்புக்கள்இ அரசியல் கட்சிகள்இ தனி நபர்கள் என எல்லா தரப்பினர்களிடமிருந்தும் முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளன. மும்மொழிவுகள் யாவும் எதிர்வரும் 2017 நவம்பர் 02ஆம் திகதிற்கு முன்னதாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆதலால் முஸ்லிம்கள் தங்களது பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் மும்மொழிவுகளை முன் வைக்க வேண்டும். அதே வேளை முஸ்லிம் கட்சிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளுராட்சி சபை தேர்தல் திருத்தச் சட்டத்தில் நடந்து கொண்டதனைப் போன்று இருக்காது சமூகத்தின் எதிர்காலம் என்பதற்கு மாத்திரம் முன்னுரிமை கொடுத்து முடிவுகளை எடுக்க வேண்டும். முஸ்லிம் கட்சிகளும் வேற்றுமைகள் காட்டாது ஒற்றுமையுடன் செயற்படுதல் வேண்டும். பல கட்சிகளும்இ பல குழுக்களும் இவற்றின் மூலமாக வளர்க்கபட்டுள்ள குரோதங்களும்தான் முஸ்லிம் சமூகத்தின் இன்றைய அவல நிலைக்கு காரணமாகும். 

இன்றைய அரசியல் சூழலில் சிங்களப் பேரினவாதமும்இ தமிழ்த் பேரினவாதமும் ஒரு நேர் கோட்டில் பயணித்துக் கொண்டிருக்கின்றன. அரசாங்கம் தமிழர்களை முடியுமான வரை திருப்திப்படுத்திக் கொள்ளவும் முஸ்லிம்களை இயன்ற வரை ஏமாற்றிக் கொள்ளும் வகையிலுமே நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம் சமூகத்தின் மக்கள் பிரதிநிதித்துவத்தை உள்ளுராட்சி சபைகளிலும் மாகாண சபைகளிலும்இ பாராளுமன்றத்திலும் குறைப்பதற்குரிய நடவடிக்கைளை இரண்டு பேரினவாததமும் கச்சிதமாக புத்திக் கூர்மையுடன் முஸ்லிம் கட்சிகளினதும் அமைச்சர்களினதும் சம்மதத்துடன் செய்து கொண்டிருக்கின்றன. 

முஸ்லிம் சமூகத்தின் இன்றைய அரசியல் மேய்ப்பாளர்கள் பேரினவாதிகளின் கூஜாத் தூக்கிகளாக இருந்து கொண்டிருக்கும் வரை முஸ்லிம் சமூகத்தினை பாதுகாத்துக் கொள்ள முடியாது.  முஸ்லிம் சமூகத்தினை இணக்க அரசியல் என்ற பேரில் பணத்திற்காகவும் பதவிக்காகவும் கோப்புகளிலிருந்து தப்புவதற்காகவும் படுகுழியில் தள்ளிக் கொண்டிருப்பனை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. முஸ்லிம் சமூகத்தின் அரசியல் மேய்ப்பாளர்கள் மாற்றப்பட வேண்டும். 

இணக்கமோ பிணககமோ எதுவாக இருந்தாலும் முஸ்லிம் சமூகத்திற்கு நன்மை தரும் நடவடிக்கைகளை எடுக்கும் அரசியல் தலைமைகள்தான் தேவையாகும்.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கு மாகாணத்திலும் இதற்கு வெளியிலும் பல இடங்களில் முஸ்லிம் பிரதேசங்களை கூறுபோட்டு முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளை சிதறடிக்கச் செய்யும் வகையில் எல்லைகளை நிர்ணயத்தைச் செய்வதற்கு பேரினவாதக் கட்சிகளும் இனவாதிகளும் மும்மொழிவுகளை முன் வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. 

அம்பாரை மாவட்டம்
இலங்கையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற மாவட்டமாக அம்பாரை உள்ளது. இம்மாவட்டத்தினை முஸ்லிம்களிடமிருந்து பறித்துக் கொள்வதற்காக மாவட்ட அரசாங்க அதிபராக சிங்கவர்களை காலத்திற்கு காலம் நியமித்து திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை மேற்கொண்டதனால் சிங்களவர்களின் தொகை முஸ்லிம்களின் சனத் தொகையை நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

இம்மாவட்டத்தில் 2012ஆம் ஆண்டின் சனத்தொகை மதிப்பீட்டின் படி முஸ்லிம்கள் 282484 பேர் உள்ளார்கள். சிங்கவர்கள் 251018 பேர் உள்ளார்கள். தமிழர்கள் 112750 பேர் உள்ளார்கள். அம்பாரை கல்முனை சம்மாந்துறை பொத்துவில் என நான்கு தொகுதிகள் உள்ளன. பொத்துவில் இரட்டை அங்கத்தவர் தொகுதியாகும். 

விகிதாசார தேர்தல் முறையின் கீழ் கிழக்கு மாகாண சபைக்கு அம்பாரை மாவட்டத்தில் இருந்து 07 முஸ்லிம்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். ஆனால் கலப்பு தேர்தல் முறையில் இதற்கும் குறைவானவர்களே தெரிவு செய்யப்படுவார்கள் என எதிர் பார்க்கப்படுகின்றன. இதே வேளைஇ சிங்களவர்களின் தெரிவுகள் அதிகரிக்கவும் வாய்ப்புண்டு. 

அம்பாரைத் தொகுதியை மூன்று தொகுதிகளாக மாற்றியமைப்பதற்கு மும்மொழிகள் செய்யப்பட்டுள்ளன. அதே வேளைஇ பொத்துவில் தொகுதியை இரண்டாக்கி தமிழர்களைப் பெரும்பான்மையாக் கொண்டதொரு தொகுதியும் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்டதொரு தொகுதியும் உருவாக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றன. முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கல்முனை சம்மாந்துறை ஆகிய தொகுதிகளுடன் ஆலையடிவேம்பு திருக்கோயில் போன்ற பிரதேசங்கள் நீங்களாக உள்ள பிரதேசங்களைக் கொண்டதொரு தொகுதியும் அமையவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றன. 

இவ்வாறு நடக்குமாயின் சிங்களவர்களினது பிரதிநிதித்துவம் அதிகரிப்பதற்கும்இ தமிழர்களின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படுவதற்கும் வாய்ப்புக்கள் உள்ளன. 50:50 என்ற முறையில் கலப்பு தேர்தல் நடைபெறும் போது முஸ்லிம்களினால் மூன்று தொகுதிகளிலும் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால்இ முஸ்லிம்களின் வாக்குகள் பல கட்சிகளுக்கும் சிதறடிக்கப்படுமாயின் விகிதாசார அடிப்படையில் உள்ள 50 வீத உறுப்பினர்கள் தொகையில் பிரதிநிதியைப் பெற்றுக் கொள்வதற்கு முடியாது போகலாம். மேலும்இ பேரினவாதக் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடும் போது முஸ்லிம்களுக்கு ஆபத்துக்கள் ஏற்படலாம். 

விகிசாதார அடிப்படையில் பிரதிநிதிகளை பட்டியலில் இருந்து உறுப்பினர்களை தெரிவு செய்யும் அதிகாரம் கட்சிகளுக்கே இருக்கும். இதனால்இ பேரினவாத கட்சிகள் எவ்வாறு நடந்து கொள்ளும் என்று கூற முடியாது.

ஆதலால் அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம்களைப் பெரும்பான்மைகக் கொண்ட நான்கு தொகுதிகள் அமைக்கப்பட வேண்டும். 93ஆயிரம் போருக்கு ஒரு பிரதிநிதி என்ற அடிப்படையில் தொகுதிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. 

இந்த நடைமுறையில் தளர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்கான முயற்சிகளை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுக்க வேண்டும். இவற்றில் அம்பாரை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்தாது உள்ளுராட்சி சபைகளில் கவனத்தை செலுத்திக் கொண்டிருக்கின்றார்கள். பிரதேச சபைகளை கோரிக் கொண்டிருக்கின்றார்கள். பிரதேச சபைகளை கேட்பது குற்றமல்ல. ஆனால் 2017 நவம்பர் 02ஆம் திகதிற்கு முன்னதாக முஸ்லிம்கள் மாகாண சபைகளின் தொகுதி எல்லைகள் குறித்தும்இ மாகாண சபைகளின் எல்லைகள் குறித்தும் மும்மொழிவுகளை சமர்ப்பிக்க வேண்டும். 

ஆதலால் முஸ்லிம்கள் இதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். நவம்பர் 02ஆம் திகதிக்கு பின்னர் பிரதேச சபையைக் கோரலாம். அல்லது இரண்டையும் சமாந்தரமாக முன்னெடுக்க வேண்டும். ஆனால் முஸ்லிம் கட்சிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் சிவில் அபை;புக்களும் புத்திஜீவிகளும் மாகாண சபை எல்லை நிர்ணயத்தில் வெறும் பார்வையாளர்களாக உள்ளமை முஸ்லிம் சமூகத்தின் மீதான அக்கறையை காட்டுவதாக உள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம்
மட்டக்கப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் 133844 பேர் 2012ஆம் ஆண்டின் கணிப்பீட்டின் அடிப்டையில் உள்ளார்கள். தமிழர்கள் 381285 பேர் உள்ளார்கள். இம்மாவட்டத்திலிருந்து கிழக்கு மாகாண சபைக்கு மூன்று முஸ்லிம்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். ஆனால்இ இங்கு முஸ்லிம்களைப் பெரும்பான்மையாக் கொண்டு இரண்டு தொகுதிகள் அமையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அங்குள்ள முஸ்லிம் பிரதிநிதிகள் ஒருமித்த அடிப்படையில் மும்மொழிவுகளை முன் வைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.ஆயினும் இம்மாவட்டத்தில் கூட முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறைவடையும் நிலையே உள்ளது.

திருகோணமலை மாவட்டம்.
இம்மாவட்டத்தில் முஸ்லிம்கள்தான் அதிகமாகவுள்ளார். 2012ஆம் ஆண்டு மேற்கொண்ட சனத் தொகை மதிப்பீட்டின் படி 152இ854 பேர் உள்ளார்கள். தமிழர்கள் 115இ549 பேர் உள்ளார்கள். இம்மாவட்டத்திலிருந்து மூன்று முஸ்லிம்கள் கிழக்கு மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டு வந்துள்ளனர். ஆதலால் இங்கு மூன்று தொகுதிகள் முஸ்லிம்களுக்கு அமைய வேண்டும். 

ஆகக் குறைந்தது இரண்டு தொகுதிகளாவது முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டதாக அமைய வேண்டும். மூதூரை மையப்படுத்தி ஒரு தொகுதியும்இ கிண்ணியாவை மையப்படுத்தி இன்னுமாரு தொகுதியும் அமைக்க வேண்டும். ஆனால் பேரினவாதிகளினால் முன் வைக்கப்பட்டுள்ள முன்மொழிகளில் மூதூரை இரண்டாக்கியும்இ கிண்ணியாவை இரண்டாக்கியும் தொகுதிகளை எல்லையிடப்பட வேண்டுமென்று கேட்கப்பட்டுள்ளன. ஆனால் முஸ்லிம் கட்சிகளும்இ சிவில் அமைப்புக்களும் எதனையும் செய்யாது எல்லா நலமாக இருப்பது போல் இருக்கின்றன.

பம்மாத்து
கரையோர மாவட்டம்இ தனி அலகுஇ கிழக்கு பிரிய வேண்டுமென்று கத்தும் முஸ்லிம் அரசியல்வாதிகள் முதலில் உடனடிப் பிரச்சினைக்கு கவனத்தை செலுத்த வேண்டும். எதுவும் செய்யாது இருப்பதுஇ இறுதி நேரத்தில் எதையாவது சொல்லுவதுஇ பின்னர் தந்தது வேறு ஒப்பமிட்டது வேறு என்று சொல்லும் அப்புலிமாமா கதைகளை முஸ்லிம்கள் நம்பக் கூடாது. தந்தது வேறு என்றால் ஏன் ஆதரவு அளித்தீர்கள். முஸ்லிம்களை ஏமாற்றும் பம்மாத்து வேலைகளை முஸ்லிம் அரசியல்வாதிகள் கைவிட வேண்டும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள்இ பாராளுமன்ற உறுப்பினர்கள் என ஒரு சிறுபடையே கட்டாருக்கு சென்றுள்ளது. இலங்கை அரசாங்கம் முஸ்லிம்களின் உரிமைகளைப்  பாதுகாத்தக் 
கொண்டிருக்கின்றது என்று காட்டுவதற்கே ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன இவர்களை அழைத்தக் கொண்டு சென்றுள்ளார். 

எதிரும்  புதிருமாக அரசியல் செய்யும் இவர்கள் பக்கத்தில் அமர்ந்து கொண்டு மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றார்கள். இவர்கள் கட்டார் அரசாங்கத்திடம் முஸ்லிம்களுக்கு சகல உரிமைகளும் உள்ளன. 

அரசாங்கத்தினால் மறுக்கப்பட்டுள்ள உரிமைகள் எல்லாம் முஸ்லிம்களுக்கு கிடைத்துள்ளதென்று புகழ்வார்கள். ஜனாதிபதியை மகிழ்விக்க வேண்டும். பிரதமர் ரணிலை மகிழ்விக்க வேண்டுமென்பதே முஸ்லிம் கட்சிகளினதும்இ பாராளுமன்ற உறுப்பினர்களினதும் நடவடிக்கையாக அமைந்துள்ளன. திரைமறைவில் ஒற்றுமையுடன் முஸ்லிம்களின் உரிமைகளுக்கு வைக்கப்படும் சதித்திட்டங்களுக்கு ஆதரவு அளித்து விட்டு பகிரங்கமாக சண்டையிடும் அரசியலால் முஸ்லிம் சமூகம் ஏமாந்து கொண்டிருக்கும் வரை முஸ்லிம் கட்சிகளும்இ பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது பம்மாத்து அரசியலை செய்து கொண்டிருப்பார்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இருக்காது என்று நினைக்கின்றோம்.

முஸ்லிம் கட்சிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் சிவில் அமைப்புக்களும் யாரையும் திருப்தியடைச் செய்யும் பம்மாத்து அரசியலை கைவிட்டு சமூகத்திற்குரிய உண்மையான உரிமை அரசியலைச் செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 

பம்மாத்து அரசியல்  பம்மாத்து அரசியல் Reviewed by Madawala News on 10/29/2017 10:53:00 AM Rating: 5