Kidny

Kidny

பிணை முறி மோசடி – குறைந்த பெறுமதியில் விலை மனு முன்வைக்குமாறு ஆலோசனை வழங்கிய ரவி


மத்திய வங்கி பிணை முறி ஏலத்தின் போது குறைந்த பெறுமதியில் விலைமனுவை முன்வைக்குமாறு அப்போதைய நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அரச வங்கிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.


முறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் மக்கள் வங்கியின் தலைவர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் தலைவர் அஷ்விந்த சில்வா ஆகியோர் ஆஜராகி சாட்சியமளித்த போதே இவ்விடயம் தெரியவந்துள்ளது.


கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 மற்றும் 31 ஆம் திகதி இடம்பெற்ற முறிகள் ஏலத்தின் போது அப்போதைய நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மத்திய வங்கியின் சில சட்டதிட்டங்களில் வரம்புமீறி நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிணை முறி மோசடி – குறைந்த பெறுமதியில் விலை மனு முன்வைக்குமாறு ஆலோசனை வழங்கிய ரவி பிணை முறி மோசடி – குறைந்த பெறுமதியில் விலை மனு முன்வைக்குமாறு ஆலோசனை வழங்கிய ரவி Reviewed by Madawala News on 10/06/2017 09:02:00 AM Rating: 5