Kidny

Kidny

புதிய அரசியல் யாப்பை தயாரிப்பது தொடர்பில் சில ஊடகங்கள் மக்களை தவறாக வழிநடத்தி வருகின்றன..


புதிய அரசியல் யாப்பை தயாரிப்பது தொடர்பில் சில ஊடகங்கள் மக்களை தவறாக வழிநடத்தி வருவதாக
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
உத்தேச அரசியல் யாப்பு தொடர்பில் இறுதி சட்டமூலம் இதுவரை தயாரிக்கப்படவில்லை. இது தொடர்பாக இடைக்கால அறிக்கை மாத்திரமே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

புதிய அரசியல் யாப்பு தொடர்பாக இலங்கை ஊடகவியல் கல்லூரி உட்பட மூன்று நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வின் அறிக்கையை பெற்றுக் கொள்ளும் நிகழ்வில் பிரதமர் உரையாற்றினார். இந்த நிகழ்வு பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று இடம்பெற்றது.

இது தொடர்பில் அடுத்தவாரம் பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளதாக பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.

அரசியல் யாப்பு பேரவையின் செயற்பாட்டு சபை பொதுமக்களின் கருத்துக்களை கேட்டுள்ளது. மகாநாயக்கர்கள் புதிய அரசியல் யாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள் என்று சில பத்திரிகைகள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.

மல்வத்து மகாநாயக்கர் தற்சமயம் வெளிநாடு சென்றுள்ளதாகவும், அஸ்கிரி மகாநாயக்கர் இது பற்றி இதுவரை தம்முடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான நிலையில் மகாநாயக்கர்களின் புகைப்படங்களை பயன்படுத்தி போலிப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவது ஏற்றுக் கொள்ளமுடியாது என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன்போது தெளிவுபடுத்தினார்.

இதேவேளை பிரதமர் தமது முகப்புத்தகத்தில் இது தொடர்பில் குறிப்பிடுகையில் ,

இன்று காலை பத்திரிக்கைககள் மற்றும் இலத்திரணியல் ஊடகங்களில் செய்திகளை பார்த்தபோது நான் பெரும் ஆச்சரியத்திற்கு உள்ளானேன். காரணம் என்னவெனில், மகாநாயக்கர்கள் அரசியல் யாப்பினை நிராகரிப்பதாகவும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவு;ம் அதில் குறி;ப்பிடப்பட்டுள்ளது.

அரசியல் யாப்பு மறுசீரமைப்பிற்கு அல்லது புதிய அரசியல் யாப்பினை சமர்ப்பிப்பதற்கோ மகாநாயக்கர்கள் எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. இந்த செய்திகள் அனைத்தும் தவறான விடயங்களை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் அந்த குறிப்பில் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் யாப்பை தயாரிப்பது தொடர்பில் சில ஊடகங்கள் மக்களை தவறாக வழிநடத்தி வருகின்றன..  புதிய அரசியல் யாப்பை தயாரிப்பது தொடர்பில் சில ஊடகங்கள் மக்களை தவறாக வழிநடத்தி வருகின்றன.. Reviewed by Madawala News on 10/19/2017 05:20:00 PM Rating: 5