Kidny

Kidny

தொடர்ந்தும் கல்விக்கு காலாள் உதைக்கும் பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரி !




அபு இஸ்மத்-

அண்மையில் நடைபெற்று முடிந்த ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகி களுத்துறை மாவட்டம் உற்பட பல இடங்களில் முஸ்லிம் மாணவர்கள் முதல் இடம் பெற்று, முழு நாட்டிலும் உள்ள பாடசாலைகளில் மாணவர்களை பாராட்டி வாழ்த்தி ஆரவாரம் கொண்டாடும் இன்றைய நிலையில், தனக்கே உரிய வழமையான  பாணியில் இதற்கு விதிவிலக்காக பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரி இருப்பது மிகவும் கவலைக்குரியதும் மனவேதனைக்குறியதுமாகும்.

 

கடந்த புதன்கிழமை ஐந்தாம் ஆண்டு  புலமைப்பரிசில்பரீட்சை பெறுபேறுகள் வெளியான போதிலும்  பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியில் இருந்து யாரும் இதுவரை  பெறுபேரறை பெற்றுக்கொள்ள பறீற்சை   திணைக்களத்திற்கு செல்லவில்லை .


கடந்த புதன்கிழமை பெறுபேறுகள் வெளியாகி வியாழக்கிழமை விடுமுறையானபோதிலும், வெள்ளிக்கிழமை நாட்டில் உள்ள சகல பாடசாலைகளிலும் கிராமப்புரங்கள் உற்பட அனைத்துப் பாடசாலைகளிலும் பாராட்டு விழாக்கள் கொண்டாடப்பட்ட நிலையில், தமது பாடசாலை யின்  பெறுபேற்றின் நிலை என்னவென்று தெரியாத நிலையில் அதிபர் உற்பட சகல ஆசிரியைகளும் காணப்பட்டனர்


பெறுபேற்றின் நிலையை அறிய பல ஆசியைகளை தொடர்பு கொண்டபோது "தமது பாடசாலையால் பெறுபேற்றை பெற்றுக்கொள்ள யாரும் செல்ல  வில்லை எமது பாடசாலையின் பெறுபேறு என்னவோ தெரியாது "என்ற ஒரே பதிலே கிடைத்தது வொள்ளிக்கிழமை ஆசிரியர் தினம் என்பதால் வழமை போன்று கூத்தும் கும்மாலமுமே காணமுடிந்தது .


அண்மைக் காலமாக Media க்களில் தொடர்ந்தும் இப்பாடசாலையின் அவலநிலை பற்றி விமர்சனங்கள் வொளியான போதிலும்

தொடர்ந்தும் பாடசாலை  நிர்வாகம் தனக்கே உரிய பாணியை கைக் கொண்டு திருந்தாமல்

இருப்பது மிகவும் கவலைக்குரியதாகும் .


பொறுபேறுகள் வெளியாகி பல நாற்கலாகியும்  பெறுபேற்றை அறியாத நாட்டில் உள்ள ஒரே ஒரு 

பாடசாலை தலைநகரில் உள்ள முஸ்லிம் மகளிர் கல்லூரியாகும்.இந்நிலையானது இக்கல்லூரியின் நிர்வாகம் தொடர்ந்தும் கல்விக்கு கொடுத்தது  வரும் முக்கியத்துவத்தை கோடிட்டுக்காட்டுகிறது .

இவ்வாறான இழிநிலை தொடருமானால் 

மகளிரின் கல்விக்கு முகவரி தந்த கல்லூரிக்கு முகவரி தேடவேண்டியா நிலை ஏற்படும் என்பதை நாம் சகலரும் தெரிந்து கொள்ளவேண்டும்.

தொடர்ந்தும் கல்விக்கு காலாள் உதைக்கும் பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரி !  தொடர்ந்தும் கல்விக்கு காலாள் உதைக்கும் பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரி ! Reviewed by Madawala News on 10/06/2017 10:15:00 PM Rating: 5