Kidny

Kidny

மாகாண சபைகளின் எல்லை நிர்ணயம் தொடர்பான குழுவின் பணிகள் ஆரம்பம்..



மாகாண சபைகளின் எல்லை நிர்ணயம் தொடர்பான குழுவின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

 

இது தொடர்பான அறிக்கைஅடுத்த வருடம் ஜனவரி மாதம் 15ஆம் திகதி அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கப்படுமெனம்று இதற்கான குழுவின் தலைவர் கே.தவலிங்கம தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கான குழுவை அண்மையில் நியமித்தார். எல்லை நிர்ணயத்திற்காக குழுவுக்கு மூன்று மாதகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஒன்பது மாகாணங்களினதும் எல்லை நிர்ணயப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

தற்சமயம் கலைக்கப்பட்டுள்ள வடமத்திய, சப்ரகமுவ, கிழக்கு மாகாண சபைகள் பற்றி இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்படவிருக்கிறது. ஊரிய மாகாண சபைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் எண்ணிக்கை அடங்கிய தகவல்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. எல்லை நிர்ணயத்தின் போது பொதுமக்களின் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்படவிருக்கின்றன


இது தொடர்பான அறிவித்தல் வார இறுதி நாட்களில் வெளியாகும் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படவிருப்பதாக இதற்கான குழுவின் தலைவர் கே.தவலிங்கம் மேலும்  தெரிவித்தார்.

மாகாண சபைகளின் எல்லை நிர்ணயம் தொடர்பான குழுவின் பணிகள் ஆரம்பம்..  மாகாண சபைகளின் எல்லை நிர்ணயம் தொடர்பான குழுவின் பணிகள் ஆரம்பம்.. Reviewed by Madawala News on 10/06/2017 11:45:00 PM Rating: 5