Kidny

Kidny

வீழ்ச்சிகண்ட பொருளாதாரத்தை கடந்த இரண்டு வருடங்களுக்குள் ஸ்திரப்படுத்த முடிந்துள்ளது..



நாட்டின் மீது சுமத்தப்பட்டுள்ள கடனை செலுத்தும்  நாம் கிராமங்களின் அபிவிருத்தியை மறந்துவிடவில்லை என்று பிரதமர்
ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
காலி பத்தேகம ஐக்கிய தேசியக் கட்சி குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இன்று காலை நடைபெற்ற இந்தக்குழுக்ககூட்டத்தில்  வீழ்ச்சிகண்ட பொருளாதாரத்தை கடந்த இரண்டு வருடங்களுக்குள் ஸ்திரப்படுத்த முடிந்திருப்பதாகவும்  பிரதமர் தெரிவித்ததுடன் கடன் செலுத்த முடியாமல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியிலிருந்து ஒதுங்கிக் கொண்டார். 

எனினும் நாம் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியுள்ளோம்.சிரமப்பட்டேனும் இலங்கை பெற்ற கடனை நாம் செலுத்தி வருகின்றோம்.இந்த கடனை எதிர்கால சந்ததியிடம் ஒப்படைக்க நான் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டார். 
தெற்கில் அபிவிருத்தியை ஏற்படுத்த நாம் எதிர்பார்க்கின்றோம்.சுற்றுலாத்துறையை விருத்தி செய்ய நாம் எதிர்பார்த்துள்ளோம். 

சிங்கராஜ வனத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் சுற்றுலாத்துறையை விருத்தி செய்ய எதிர்பார்க்கின்றோம். காலியின் பொருளாதார அபிவிருத்தி 19ம் நூற்றாண்டில் நிறைவு பெற்றது. 

எனினும் 21ம் நூற்றாண்டில் இந்த பொருளாதார அபிவிருத்தியை காலியில் ஏற்படுத்த நாம் எதிர்பார்த்துள்ளோம் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார். 
இந்த நிகழ்வில் அமைச்சர்களான வஜிர அபேவர்த்தன, கயந்த கருணாதிலக, ஹரீன் பெர்னாண்டோ உள்ளிட்ட பலர் கலந்துபொண்டனர். மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
வீழ்ச்சிகண்ட பொருளாதாரத்தை கடந்த இரண்டு வருடங்களுக்குள் ஸ்திரப்படுத்த முடிந்துள்ளது..  வீழ்ச்சிகண்ட பொருளாதாரத்தை கடந்த இரண்டு வருடங்களுக்குள் ஸ்திரப்படுத்த முடிந்துள்ளது.. Reviewed by Madawala News on 10/15/2017 10:56:00 PM Rating: 5