Ad Space avaiable

கடல் அலைகள் மூலம் மின்சாரம் பெற்றுக்கொள்ள நடவடிக்கை


கடல் அலைகள் மூலம் மின்சாரத்தை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கையில் பின்லாந்து நாடு பெற்றுள்ள அனுபவத்தையும் தொழில்நுட்பத்தையும் இலங்கையுடன் பரிமாறிக்கொள்வதற்கு முன்வந்துள்ளது.

இது தொடர்பிலான திட்டம் இலங்கையில் அடுத்தவருடத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு பின்லாந்து நாட்டின் ஏடபிள்யூ எரிசக்தி நிறுவனத்தின் அதிகாரி ஜோன் லில்ஜிலன்ட் ( John Liljelund) முன்வந்துள்ளார்.


பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஏடபிள்யூ எரிசக்தி நிறுவன அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.


பின்லாந்துக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் நேற்றையதினம் இந்த தொழிற்சாலை பகுதிக்கு விஜயம் செய்தனர்.


கடல் அலைகள் மூலம் மின்சாரத்தை பெற்றுக்கொள்வதற்கான உபகரணங்களை ஏடபிள்யூ நிறுவனம் தயாரித்து வருகின்றது. தொழிற்சாலைக்கு சென்ற பிரதமர் தலைமையிலான குழுவினர் அங்குள்ள தொழில்நுட்பம் முதலானவற்றை பார்வையிட்டு கவனம் செலுத்தினர்.


இந்த நிறுவனம் அந்த நாட்டு அரசாங்கத்திற்கு உட்பட்டதாகும். கடல் நீர் மூலம் குடிநீரை வழங்குவது மற்றும் மின்னுற்பத்தி தொடர்பிலான இலங்கையின் கரையோரத்தில் மேற்கொள்ளப்படும் மதிப்பீட்டு நடவடிக்கைகள் விரைவில் பூர்த்திசெய்யப்படும். மின்சக்தி தொடர்பில் அடுத்தவருடம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் நிறுவனத்தின் அதிகாரி மேலும் தெரிவித்தார்.


இதன்போது இலங்கை தூதுக்குழுவினர் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கழிவு முகாமைத்துவம் , கழிவுப்பொருள் மீள்சுழற்சி தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடினர்.

கடல் அலைகள் மூலம் மின்சாரம் பெற்றுக்கொள்ள நடவடிக்கை கடல் அலைகள் மூலம் மின்சாரம் பெற்றுக்கொள்ள நடவடிக்கை Reviewed by Madawala News on 10/10/2017 06:08:00 PM Rating: 5