Kidny

Kidny

பொரும்பான்மை ஊடகங்களில் கிளப்பிவிடப்பட்டுள்ள புதிய புரளி !


ஐஎஸ் எனப்படும் தீவிரவாதிகளுடன் இணைந்து சிறிலங்காவைச் சேர்ந்த மருத்துவர்களும் பணியாற்றுவதாக, ஐஎஸ் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள காணொளி ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளதாக பெரும்பான்மை ஊடகங்கள் புதிய  கிளப்பிவிட்டுள்ளன.

ஐஎஸ் தீவிரவாதிகளின் மருத்துவ வசதிகள் பற்றிய சுமார் 15 நிமிடக் காணொளி ஒன்று அந்த அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளதாகவும் இந்தக் காணொளியில் இந்தியாவைச் சேர்ந்தவர் என்று சந்தேகிக்கப்படும் மருத்துவரான, அபு அல் முகாதில் என்பவர், ஐ.எஸ் அமைப்பின் மருத்துவ வசதிகள் தொடர்பாக உரையாற்றியுள்ளதாகவும் சிங்கள ஆங்கில ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ள அதேவேளை

ரக்காவில் உள்ள ஐஎஸ் அமைப்பில் மருத்துவ நிலையத்தில் மிக நவீன வசதிகள் இருப்பதை இந்தக் காணொளி வெளிப்படுத்தியுள்ளதாகவும் இங்கு இந்திய மருத்துவர் பணியாற்றுவதாக சந்தேகிக்கப்படுகிறது.

சிறிலங்கா, அவுஸ்ரேலியா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளின் மருத்துவர்கள் இந்த மருத்துவ நிலையத்தில் பணியாற்றுவதாக, இந்திய மருத்துவர் காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் உலகெங்கும் உள்ள மருத்துவ நிபுணர்களை இஸ்லாமிய அமைப்புடன் இணைந்து பணியாற்ற முன்வருமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

அதேவேளை, குறிப்பிட்ட இந்திய மருத்துவர் தென்மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று இந்திய புலனாய்வு அமைப்புகள் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக,இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே இலங்கை அமெரிக்க தூதரகத்தை ஐ எஸ் தாக்க திட்டமிட்டுள்ளதாக சிங்கள ஊடகங்கள் தெரிவித்திருந்த நிலையில் அரசு அதனை மறுத்திருந்தது.
பொரும்பான்மை ஊடகங்களில் கிளப்பிவிடப்பட்டுள்ள புதிய புரளி !  பொரும்பான்மை ஊடகங்களில்  கிளப்பிவிடப்பட்டுள்ள புதிய புரளி ! Reviewed by Madawala News on 10/23/2017 05:16:00 PM Rating: 5