Ad Space avaiable

ஞானசார தேரரை காப்பாற்ற துடிக்கும் ஒரு கொழுத்த ஆடு அதற்கு உதவியாக ஒரு முஸ்லிம் கருத்த ஆடு


ஞானசார தேரரை காப்பாற்றும் முயற்சியில் ஐக்கிய தேசிய கட்சியின் கொழுத்த அரசியல்வாதி ஒருவரே
செயற்பட்டுவருவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

ஊழல் குற்றச்சாட்டுக்கள் காரணமாக நல்லாட்சியில் டபுல் டிமோஷன் ஆன கொழும்பு மாவட்டதை சேர்ந்த கொழுத்த அரசியல் வாதி ஒருவர் ஊடாக முஸ்லிம் அரசியல் வாதி ஒருவர் ஊடாகவே பொதுபல மற்றும் முஸ்லிம்  தரப்பு இடையே சமரச பேச்சுவார்த்தை இடம்பெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ஹோமாகம நீதி மன்றத்தை அவமதித்த வழக்கு விசாரணையில் ஞானசார தேரருக்கு எதிராக கடும் தண்டனை கிடைக்குமென எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் ஜனாதிபதி தரப்பிடம் தனக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்துள்ளதாகவும் இதன் பின்னனியிலே முஸ்லிம் தரப்புடன் சமரச பேச்சுவார்த்தை முயற்சிகளை குறித்த கொழுத்த அரசியல்வாதி ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஞானசார தேரரை காப்பாற்ற துடிக்கும் ஒரு கொழுத்த ஆடு அதற்கு உதவியாக ஒரு முஸ்லிம் கருத்த ஆடு  ஞானசார தேரரை காப்பாற்ற துடிக்கும் ஒரு கொழுத்த ஆடு அதற்கு உதவியாக  ஒரு முஸ்லிம் கருத்த ஆடு Reviewed by Madawala News on 10/13/2017 10:26:00 PM Rating: 5