Kidny

Kidny

உள்ளுராட்சி மன்ற தேர்தல் வர்த்தமானி வரும் புதன்கிழமை வெளியாகும்


உள்ளுராட்சி மன்ற தேர்தல்களை நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் புதன்கிழமை
வெளியிடப்படும் என அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்

குறித்த அறிவித்தல் செவ்வாய்க்கிழமையளவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும என்று அவர் குறிப்பிட்டார்

இன்று (27) காலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்

அம்பகமுவை மற்றும் நுவரெலிய பிரதேச சபைகள் வேறுபடுத்தப்படும் விதம் தொடர்பாக இங்கு வௌிப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்

குறித்த பிரதேசங்களில் எல்லைகள் மற்றும் மக்கள் செறிவு என்பன தொடர்பாக கவனம் செலுத்திய பின்னர் குறித்த அறிக்கையை வெளியிடவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்

ஒரு சில தீர்மானங்கள் எடுக்கப்பட்ட பின்னர் அமைச்சர்கள் தமது தனிப்பட்ட கொள்கைக்கு அமைவாக செயலாற்றுவதாக அவர் குற்றம் சுமத்தினார்.



உள்ளுராட்சி மன்ற தேர்தல் வர்த்தமானி வரும் புதன்கிழமை வெளியாகும்  உள்ளுராட்சி மன்ற தேர்தல் வர்த்தமானி வரும் புதன்கிழமை வெளியாகும் Reviewed by Madawala News on 10/27/2017 01:42:00 PM Rating: 5