Kidny

Kidny

தவறுகளின் மறு பெயர்தானா சாணக்கியம் ?

நீங்கள் முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக பதவி ஏற்றதன் பிற்பாடு நீங்கள் சாணக்கியமாக சறுக்கிய விடயங்கள் ஏராளம்அவற்றில் சில...


1) 2002ம் ஆண்டு ரணில் பிரபா ஒப்பந்தம் நடந்தபோது, அந்த ஒப்பந்தத்தில் முஸ்லிம்களை ஒரு குழு என்று எழுதுவதை அனுமதித்து முஸ்லிம் சமூகத்தின் கழுத்தை அறுத்தீர்கள்.

2) அதே காலப்பகுதியில் பிரபாகரனுடன் பிரியாணி சாப்பிட்டுக்கொண்டு ஒப்பந்தம் செய்தீர்கள், அந்த ஒப்பந்தத்தில் வழுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட வடபுல முஸ்லிம்களை சாதாரணமான முறையில் வெளியேறிய மக்கள் என்று குறிப்பிட்டதை பார்த்து ரசித்து மகிழ்ந்தீர்கள்.

3) 18வது திருத்தம் நிறைவேற்றப் பட்டபோது அதனை ஆதரித்துவிட்டு, பிறகு தவறுசெய்துவிட்டோம் என்று புலம்பினீர்கள்.

4)மாகாணசபையில் தெவிநெகும சட்டம் வந்தபோது அதனை ஆதரித்து வாக்களித்துவிட்டு, பிறகு கூறினீர்கள் எனக்கு தெறியாமல் செய்துவிட்டார்கள் என்று.

5) 20வது திருத்தச்சட்டம் பிழையானது என்று தெறிந்து கொண்டும்அதனை கிழக்கு மாகாணசபையில் நிறைவேற்றி பிறகு நீதிமன்ற தீர்ப்பின் பின் மூக்கு உடைபட்டீர்கள்.

6) உள்ளூராட்சி தேர்தல் சட்டதிருத்தம் முஸ்லிம் மக்களுக்கு பாதகமானது என்று நீங்கள்தான் பாராளுமன்றத்தில் கத்தினீர்கள், மறுநாள் ஆதரித்து வாக்களித்தீர்கள்.

7) மாகாணசபை தேர்தல் திருத்தச்சட்டம் வரும்போது, இது நமது சமூகத்துக்கு ஆபத்தானது என்று கூறியது மட்டுமல்ல, இந்த விடயத்தில் எல்லா முஸ்லிம் உறுப்பினர்களும் எதிர்த்து வாக்களிக்கவேண்டும் என்று கூறிவிட்டு, பிறகு அந்தர் வெல்டி அடித்து அதனை ஆதரித்து ஆருதல் அடைந்து கொண்டீர்கள்.

இப்போது எங்களை பேக்காட்டி விட்டார்கள் என்று மூக்கால் அழுகின்றீர்கள்.

இப்போது வடகிழக்கு இணைப்பு விடயத்திலும் சாணக்கியமாக சறுக்கிவிட்டு பிறகு கூறுவீர்கள் எங்களை ஏமாற்றிவிட்டார்கள் என்று.(அப்போது நீங்கள் கண்டியில்தான் இருப்பீர்கள் பல கோடிகளுக்கு அதிபதியாக, ஆனால் இங்கே வரவேண்டிய அவசியம் இருக்காது)

மற்றவிடயங்களை நான் தொட்டுச் சொல்லவில்லை, அது இன்னும் ஏராளம் உண்டு.(தம்புள்ள பள்ளிவிடயம் தொடங்கி மஹியங்கனை பள்ளிவாசல் விடயம் வரை)

ஆகவே இவர்கள் யார்? என்றாவது புரிந்து கொள்வதற்கு முடியாது விட்டால் இவர்களை மனிதர்கள் என்று சொல்வதற்கே வெட்கமாக இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

எம்.எச்.எம்.இப்றாஹிம்,
கல்முனை.
தவறுகளின் மறு பெயர்தானா சாணக்கியம் ?  தவறுகளின் மறு பெயர்தானா சாணக்கியம் ? Reviewed by Madawala News on 10/21/2017 01:57:00 PM Rating: 5