Kidny

Kidny

நாம் நீதிமன்ற உத்தரவை மதிக்கிறோம் ஆனால் திட்டமிட்டபடி எமது ஆர்ப்பாட்டம் நடைபெறும்..


நாம் நீதிமன்ற உத்தரவை மதிக்கிறோம் ஆனால் திட்டமிட்டபடி எமது ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் இடம்பெறுமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தங்காலை – கால்டன் இல்லத்தின் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் டி வி சானக தலைமையில் ஹம்பாந்தோட்டை நீதிமன்ற வளாகத்தில் இன்றைய தினம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு காலி நீதிவான் நீதிமன்றம் தடையுத்தரவை பிறப்பித்திருந்தது.

ஹம்பாந்ததோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியமை மற்றும் மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஒன்றிணைந்த எதிரணியினரால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் நீதிமன்ற தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொறுமதிவாய்ந்த காணிகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதை தடுத்து நிறுத்த அனைவரும் தம்மோடு ஒன்றினைய வேண்டும் என நாமல் ராஜபக்‌ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
நாம் நீதிமன்ற உத்தரவை மதிக்கிறோம் ஆனால் திட்டமிட்டபடி எமது ஆர்ப்பாட்டம் நடைபெறும்.. நாம் நீதிமன்ற உத்தரவை மதிக்கிறோம் ஆனால் திட்டமிட்டபடி எமது ஆர்ப்பாட்டம் நடைபெறும்.. Reviewed by Madawala News on 10/06/2017 08:26:00 AM Rating: 5