Kidny

Kidny

முஸ்லிம்தரப்பு நியாயங்களை பொதுபலசேனா ஏற்றுக்கொண்டது




ஐந்தாம் சுற்றுப்பேச்சுவார்த்தை நவம்பரில்
முஸ்லிம் தரப்புக்கும், பொதுபலசேனா நிபுணர்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்தையின் போது,
முஸ்லிம்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை பொதுபலசேனா நிபுணர்கள் ஏற்றுக்கொண்டதாக,தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்தார்.

இதுவரைகாலமும் வில்பத்துவை முஸ்லிம்களே நாசப்படுத்தி வந்துள்ளதாக நினைத்த, தங்களுக்கு எதிர்பார்த்த அளவில் போதிய விளக்கங்கள் கிடைத்திருக்கவில்லை எனவும் பொதுபலசேனா நிபுணர்கள் தெரிவித்ததாகவும் அசாத் சாலி தெரிவித்தார்.

பொதுபல சேனா அமைப்பின் பிரதிநிதிகள் குழுவுக்கும் முஸ்லிம் சமூக பிரதிநிதிகளுக்குமிடையிலான நான்காம் கட்ட பேச்சுவார்த்தை (23) கொழும்பில் நடைபெற்றது. இது குறித்து கருத்து வினவிய போதே அஸாத்சாலி இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது:

வில்பத்து சரணாலயம் அழிக்கப்பட்டிருப்பதாக கூறுகிறீர்கள். அது எங்கே இடம்பெற்றுள்ளது? வில்பத்து காடழிக்கப்பட்டு நாமல்கம உருவாக்கப்பட்ட போது நீங்கள் எங்கிருந்தீர்கள்? முஸ்லிம்கள் பூர்வீகக் குடிகளாக வசித்த நிலங்களையே நாம் வேண்டுகிறோம். அதுவல்லாமல் நாம் அரச காணிகளை கேட்கவில்லைஎன பல ஆக்கபூர்வமான வினாக்களை அங்கு தொடுத்ததாகவும் அஸாத்சாலி தெரிவித்தார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அவர்

இப்பேச்சுவார்த்தையின் போது வில்பத்து விவகாரம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. வில்பத்துவில் முஸ்லிம்கள் காடுகள் அழிப்பதாக முன்வைக்கப்பட்டு வந்த குற்றச்சாட்டு தொடர்பில், பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை பேராசிரியர் எஸ். நௌபல் அதன் உண்மை நிலவரம் குறித்து தெளிவானதொரு விளக்கம் அளித்தார். வில்பத்து தொடர்பில்
இதுவரைகாலமும் சுமத்தப்பட்டுவந்த குற்றச்சாட்டுக்களுக்கு நாம் வழங்கிய பதில்களை பொதுபல சேனா பிரதிநிதிகள் குழு ஏற்றுக்கொண்டதுஎனவும் அவர் குறிப்பிட்டார்.

இப்பேச்சுவார்த்தையில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஆத்தே ஞானசார பங்கேற்கவில்லை எனினும் அடுத்து வரும் பேச்சுவார்த்தைகளில் அவர் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பேச்சுவார்த்தையில் முஸ்லிம் தரப்பு சார்பில் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா பிரதிநிதிகள், முஸ்லிம் சிவில் சமூக பிரதிநிதிகள், சட்டத்துறை மற்றும் தொழில்சார் நிபுணர்கள் கலந்துகொண்டனர்

பொதுபலசேனா சார்பில் அவ்வமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திலன்த விதானகே உள்ளிட்ட நிபுணர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

ஐந்தாம் சுற்றுப்பேச்சுவார்த்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 02ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளதுடன், இப்பேச்சுவார்த்தையில் குர்ஆன் மத்ரசாக்கள் பாடசாலைகள் உள்ளிட்ட விடயங்கள் மிகமுக்கியமாக ஆராயப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஹெட்டி ரம்ஸி -  
முஸ்லிம்தரப்பு நியாயங்களை பொதுபலசேனா ஏற்றுக்கொண்டது  முஸ்லிம்தரப்பு நியாயங்களை பொதுபலசேனா ஏற்றுக்கொண்டது Reviewed by Madawala News on 10/25/2017 11:10:00 AM Rating: 5