Kidny

Kidny

ஊழலை ஒழிப்பதற்கான தேசிய செயற்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்..


இலங்கையில் ஊழலை ஒழிப்பதற்கான தேசிய செயற்திட்டமொன்று நிறைவேற்றப்படவுள்ளது.
இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக வலுப்படுத்துதல் நாட்டின் தேசிய இணக்கப்பாட்டை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் அனைத்து திட்டங்களிலும் பயனுள்ள வகையில் இணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

மோசடி, லஞ்சம் மற்றும் ஊழல்களை தடுப்பது தொடர்பில் அரசாங்கம் மற்றும் தனியார் துறை ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் லஞ்சம் மற்றும் ஊழலின் காரணமாக இலங்கை சமூகத்தின் மத்தியில் ஏற்படும் பாதகமான அழுத்தத்தை பொது மக்கள் மத்தியில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இலங்கையில் ஊழலை தடுப்பதற்கான செயற்திட்டமொன்றை சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஆலோசனைகளை பெற்று தயாரிப்பதற்காக நீதி அமைச்சர் திருமதி. தலதா அத்துகோரள முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
ஊழலை ஒழிப்பதற்கான தேசிய செயற்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்..  ஊழலை ஒழிப்பதற்கான தேசிய செயற்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்.. Reviewed by Madawala News on 10/25/2017 05:08:00 PM Rating: 5