Ad Space Available here

முஸ்லிம் தேசிய கூட்ட மைப்பு உருவாக்கப்பட வேண்டியதன் அவசியம்.பல்லினம் செறிந்து வாழும் ஒரு நாட்டில் சிறுபான்மை இனங்களை உரிமையுடன் வாழ வைப்பதற்கும் அவர்களும்
சுயநிர்ணம் கொண்ட தேசிய இனம் என்பதனை தேசியமறியச் செய்விப்பதற்குமான முன்னெடுப்புகளைநிருவாகமற்றும்அரசியல்ரீதியாக மேற்கொள்ள வேண்டும்

இங்கு, இனத்துவ மேலெழுச்சி கொண்ட பேரினம் வாழும் எமது நாட்டில் சிறுபான்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் பெரும்பான்மை சமூகத்தினுள் அமிழ்ந்துவிடாது தமது தனியுரிமையுடன் வாழ்வதற்கான முன்னெடுப்பினை அரசியல் ரீதியாக நகர்த்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் இந்நாட்டு முஸ்லிம் சமூகத்தின் இருப்பினை அரசியல் ரீதியாக உத்தரவாதப்படுத்துவதற்கான அரசியல் பயணம் சகோதர தமிழ் சமூகத்துடன் இணைந்துஇணக்க அரசியல்என்னும் தொணியில் பயணிக்க ஆரம்பித்தது. எனினும், அப்போது ஏற்படுத்தப்பட்ட இணக்க அரசியலில் முஸ்லிம்களது தனித்துவம் இழக்கப்படுவதற்கான அச்சம் உணரப்பட்டதனைத் தொடர்ந்து எமது சமூகத்திற்கான தனித்துவ அரசியல் பயணத்திற்காக வேண்டி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினை மறைந்த தலைவர் அவர்கள் பகீரத பிரயத்தனத்துக்கும் அரசியல் நெருக்கடிகளுக்கும் மத்தியில் துவக்கினார்.

இக்கட்சிக்கு அதனது தொடக்ககாலத்தில் கிழக்கிலங்கையில் பரந்த மக்கள் தளம் கிடைக்கப் பெற்றது. இவ்வாறு கட்சியின் உருவாக்கற் காலத்தில் கட்சிக்கான மக்களாதரவு பாரியளவில் கிடைக்கப்பெறக் காரணம் அப்போதைய கட்சியின் அரசியல் நகர்வானது சமூகத்தின் உரிமைக்கானதாய் அமைந்திருந்தமையாகும்.

எனினும், இதுவிடயத்தில் கட்சியின் தற்போதைய செயற்பாடுகள் பலத்த சந்தேகங்களை அதன் ஆதரவாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்றது.

தற்போதைய அரசியல் தலைமையும் கட்சியின் சக உறுப்பினர்களும் பகட்டு அபிவிருத்தி என்னும் மாயைக்குள் எம்சமூகத்தின் நிலையான உரிமை அரசியலை புதைத்தழிக்கும் கைங்கரியத்தையே அரங்கேற்றி வருகின்றனர் என்னும் ஆதங்கம் ஆதரவாளர்கள் மத்தியில் அதிகமாகவே காணப்படுகின்றன.

தற்போது அரசியலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸானது கிராமிய மேடைகளில் மாத்திரமே உரிமை அரசியல் குறித்து பேசும் அதேவேளை பேச வேண்டிய உயரிய சபைகளான பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைகளில் முஸ்லிம்களது உரிமை தொடர்பில் பேசுவதற்கு நாதியற்ற கட்சியாக உள்ளது என்பதை கட்சியின் கடந்த கால அனுபவங்கள் குறித்து நிற்கின்றன

கட்சியின் தலைமைக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் கிடைக்கப்பெறும் வரப்பிரசாதங்கள் காரணமாக பேரின அரசுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் அடிபணிந்து உரிமைகள் தொடர்பில் வாய்திறக்க திராணியற்றவர்களாக கட்சியின் தலைமை உள்ளிட்ட அதன் தற்கால பிரமுகர்கள் உள்ளனர் என்ற கசப்பான உண்மையை சொல்லித்தான் ஆகவேண்டியுள்ளது

குறிப்பாக கட்சி எதிர்கொண்ட அதிகமான தேர்தல்களில் வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனங்களில் வலியுறுத்தப்பட்டகரையோர மாவட்டம்மற்றும்நிலத்தொடர்பற்ற அதிகார அலகுபோன்றவைகளை பெற்றுக் கொள்வதனை சாத்தியமாக்குவதற்கான வழிவகைகளை முன்னெடுக்கவில்லை

வழிப்படுத்தும் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையில் முஸ்லிம் சமூகம் தொடர்பில் எவ்வித காத்திரமான முடிவுகளையோ அல்லது தீர்மானங்களையோ முன்வைக்கவில்லை என்கின்ற ஏக்கமும் விரக்தியும் இன்று அதன் ஆதரவாளர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது

தலைவரின் மறைவிற்கு பின்னரான கட்சியின் அரசியல் நகர்வானது சமூகத்திற்கு நன்மைபயக்கும் வகையில் அமையப்பெறவில்லை என்பதனை ஆதரத்துடன் இங்கு நிறுவ முடியும். பதவி மோகத்தில் சமூகத்தின் வாக்குகளை பேரினத்திடம் விலை பேசி விற்று பை நிரப்பும் செயற்பாடுகளும் ஆங்காங்கே நிகழவே செய்கின்றது

தற்போதைய தலைமையின் கீழ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் இழைக்கப்பட்ட வரலாற்றுத் தவறுகல் பல உள்ளன. குறிப்பாக, ஜனநாயகத்தினை குழிதோண்டிப் புதைக்க காரணமான அரசியலமைப்பிற்கான 18 ஆம் திருத்தத்திற்கு அற்ப சுகபோகங்களுக்காக ஆதரவு வழங்கிவிட்டு பின்னர்கண்ணைத் திறந்து கொண்டு பாதாளத்தில் வீழ்ந்து விட்டோம்என்று கதறி சாமான்ய மக்களின் காலைப் பிடித்து பிராயச்சித்தம் பெற்றார் கட்சியின் நவ தலைவர்

இதேபோல மாகாணத்தின் அதிகாரத்தை மத்திக்கு தாரை வார்க்கும்திவிநெகும சட்ட மூலம்மற்றும் கிழக்கிலங்கையின் மூக்கணாங் கயிற்றை மத்திய பாராளுமன்றத்திற்கு வழங்கவிருந்த  “அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்திற்கான ஆதரவுபோன்றவைகள் கட்சியினால் இழைக்கப்பட்ட வரலாற்றுத் தவறுகளுள் சிலவாகும்

கட்சியின் தற்போதைய தலைவர் தனது சொந்த நிகழ்ச்சி நிரலில் செயற்படும் அதேவேளை கட்சிக்குள் தனது நிலையைப் பலப்படுத்துவதிலேயே குறியாய் உள்ளார். இதற்காக வேண்டி கட்சியின் அடிப்படை தூண்களான முன்னாள் தவிசாளர் கௌரவ பஷீர் சேகுதாவுத், கட்சியின் முன்னாள் செயலாளர் கௌரவ எம்.ரீ.ஹசன் அலி, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கௌரவ ஜவாஹிர் சாலி, பால முனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்..அன்சில், நிந்தவுர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கௌரவ எம்..எம்.தாஹிர் மற்றும் கட்சியின் முன்னாள் உயர் பீட உறுப்பினர் நஸார் ஹாஜியார் போனறோர்கள் வேண்டுமென்று வலிந்து வெறியேற்றப்பட்டனர்

முஸ்லிம்களது எதிர்கால இருப்பினை இத்தேசியத்தில் உறுதிப்படுத்துவது தொடர்பிலான வலுவானதும் நிலையானதுமான தீர்மானமோ கொள்கையோ இல்லாதிருக்கும் இக்கட்சியைக் காட்டிலும் கட்சியில் இருந்து பிரிந்து தனித்து அரசியல் நடாத்தும் அத்தனை கனத்த அரசியல் தலைவர்களையும் ஏனைய முஸ்லிம் கட்சிகளையும் உள்ளடக்கியமுஸ்லிம் தேசிய கூட்டமைப்புஎன்ற ஒரு வலுவான கூட்டினை உருவாக்கி சிறப்பான ஆளுமை கொண்டதலைமைத்துவ சபையின் கீழ்பயணிப்பதே காலத்தின் தேவையாகும்.
முஸ்லிம் தேசிய கூட்ட மைப்பு உருவாக்கப்பட வேண்டியதன் அவசியம்.  முஸ்லிம் தேசிய கூட்ட மைப்பு உருவாக்கப்பட வேண்டியதன் அவசியம். Reviewed by Madawala News on 10/06/2017 07:41:00 PM Rating: 5