Kidny

Kidny

கபீர் பைஸர் அமைச்சரவையில் கடும் வாக்குவாதம்..

உள்­ளூ­ராட்சி தேர்தல் தொடர்பில் ஐக்­கிய தேசியக் கட்­ சியின் செய­லா­ளரும் அமைச்­­ரு­மான கபீர் ஹாஸிம்
மற்றும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் முக்­கி­யஸ்­தரும் உள்­ளூ­ராட்சி மாகாண சபைகள் அமைச்­­ரு­மான பைசர் முஸ்­தபா ஆகி­யோ­ருக்­கி­டையில் அமைச்­­­வையில் கடும் வாய்த்­தர்க்கம் ஏற்­பட்­டுள்­ளது.  

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் ஜனா­தி­பதி செய­­கத்தில் நேற்று முற்­பகல் அமைச்­­ரவைக் கூட்டம் இடம்­பெற்­றது. இந்தக் கூட்­டத்தில் உள்­ளூ­ராட்சி தேர்தல் தொடர்பில் கருத்து தெரி­வித்த ஐக்­கிய தேசியக் கட்­சியின் செய­லா­ளரும் அமைச்­­ரு­மான கபீர் காசிம், உள்­ளூ­ராட்சித் தேர்­தலை உட­­டி­யாத நடத்த வேண்டும். கலப்பு முறையில் நடத்­து­­தற்கு கால தாமதம் செல்லும் என்­­­னா­லேயே பழைய முறை­யின்­படி நடத்­து­மாறு நாம் முன்னர் கோரி­யி­ருந்தோம். ஆனால் புதிய முறை­யான கலப்பு முறையின் கீழேயே தேர்­தலை நடத்­­வேண்­டு­மென்று சுதந்­திரக் கட்சி அடம் பிடித்­­மை­யி­னா­லேயே தேர்­தலை பிற்­போடும் நிலை ஏற்­பட்­டி­ருந்­தது. இனியும் தேர்­தலை கால­தா­­தப்­­டுத்த முடி­யாது என்று தெரி­வித்­துள்ளார்.

இதற்கு பதி­­ளித்த உள்­ளூ­ராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்­தபா, உங்கள் கட்­சியின் நிலைப்­பாடு அவ்­வாறு இருக்­கலாம். ஆனால் எமது சுதந்­திரக் கட்சி கலப்பு முறை­யின்­­டியே தேர்­தலை நடத்­­வேண்டும் என்­பதில் உறு­தி­யாக இருந்­தது. இதனால் தான் கால­தா­மதம் எற்­பட்­டது. உண்­மை­யி­லேயே தேர்தல் கால­தா­­­­டை­­தற்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக் ஷவையே நீங்கள் குற்றம் சுமத்த வேண்டும். அத­னை­வி­டுத்து சுதந்­திரக் கடசி மீது குற்றம் சாட்­டு­வது தவ­றான செயற்­பா­டாகும் என்று தெரி­வித்­துள்ளார். இத­னை­­டுத்து இரு­­ருக்­கு­மி­டையில் கடும் வாய்த்­தர்க்கம் இடம்பெற்றுள்ளது.

வாய்த்தர்க்கம் அதகிரித்ததையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விடயத்தில் தலையிட்டு இருவரையும் அமைதிப்படுத்தவேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது
கபீர் பைஸர் அமைச்சரவையில் கடும் வாக்குவாதம்..  கபீர் பைஸர் அமைச்சரவையில் கடும் வாக்குவாதம்.. Reviewed by Madawala News on 10/25/2017 11:33:00 AM Rating: 5