Kidny

Kidny

புதிய அரசமைப்பு நாட்டை பிளவுப்படுத்தும் வகையில் அமைந்தால் அதற்கு எதிராகவே சுகந்திரக் கட்சி வாக்களிக்கும்


புதிய அரசமைப்பு நாட்டை பிளவுப்படுத்தும் வகையில் அமைந்தால் அதற்கு எதிராகவே சுகந்திரக் கட்சி வாக்களிக்கும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.


மடக்கும்புர பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.


அவர் மேலும் தெரிவித்ததாவது, “புதிய அரசமைப்பில் நாடு ஒருபோதும் பிளவுப்படாது. வடக்கு, கிழக்கை இணைப்பதோ அல்லது பௌத்த மதத்திற்கான முன்னுரிமையை நீக்குவதே இதன் நோக்கமும் அல்ல.


ஒருமித்த நாட்டுக்குள் சமாதானமாக வாக்களிக்கவே அரசமைப்பு உருவாக்கப்படுகிறது. அதனை தாண்றிச் சென்றால் அரசமைப்புக்கு எதிராக வாக்களிக்கவும் தயாராகவே இருகின்றோம்


உள்ளுராட்சி தேர்தலில் பல்வேறு கட்சிகளுடன் பாரிய கூட்டணியை அமைத்தே களமிறங்கும்என்றார்.

புதிய அரசமைப்பு நாட்டை பிளவுப்படுத்தும் வகையில் அமைந்தால் அதற்கு எதிராகவே சுகந்திரக் கட்சி வாக்களிக்கும் புதிய அரசமைப்பு நாட்டை பிளவுப்படுத்தும் வகையில் அமைந்தால் அதற்கு எதிராகவே சுகந்திரக் கட்சி வாக்களிக்கும் Reviewed by Madawala News on 10/30/2017 08:45:00 AM Rating: 5