Kidny

Kidny

சுதந்திரக்கட்சியின் பல சிரேஸ்ட உறுப்பினர்கள் கடும் அதிருப்தியுடனும், விரக்தியுடனும் உள்ளனர்..


சுதந்திரக்கட்சியின் பல சிரேஸ்ட உறுப்பினர்கள் கடும் அதிருப்தியுடனும், விரக்தியுடனும் காணப்படுவதாக
சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உபதலை வரும் இரத்தினபுரி பாராளுமன்ற உறுப் பினருமான ஜோன் செனவிரட்ன தெரிவித்தார்.

கட்சியின் முக்கிய  உறுப்பினர்கள் அமைப்பாளர் பதவிகளிலிருந்து நீக்கப்படுகின்றமை என்னைப் போன்ற சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு விரக்தியை ஏற்படுத்தியிருக்கின்றது என்று கூறியுள்ளார்.

இவ்வாறு நிலைமை நீடித்தால் சிறி லங்கா சுதந்திரக் கட்சியினால் 2020 ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடிக்க முடியாது. நாம் கட்சியை பலப்படுத்த வேண்டு மென்று எண்ணுகின்றோம். ஆனால் அது சாத்தியமாகாது போன்று தெரிகின்றது. விரைவில் இது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தவுள்ளோம் என்றும் ஜோன் செனவிரட்ன சுட்டிக்காட்டினார்

அண்மையில் ஸ்ரீலங்கா சு. தொடர்பில் அமைச்சர் ஜோன் செனவிரட்ன கடும் விரக்தியுடன் இருப்பதாக தகவல்கள் வெளிவந்திருந்த நிலையில் அது தொடர்பில் அவரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உபதலை வரும் இரத்தினபுரி பாராளுமன்ற உறுப் பினருமான ஜோன் செனவிரட்ன இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பதற்காகவே நாங்கள் பல் வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம்சுதந்திரக்கட்சியை மிக வலுவான ரீதியில் உருவாக்கி 2020 ஆம் ஆண்டு ஆட்சியை தனித்து அமைக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாக காணப்படுகின்றது

அந்த நோக்கத்திற்காகவே நாங்கள் பயணித்துகொண்டிருக்கின்றோம். ஆனால் 2020 ஆம் ஆண்டில் தனித்து ஆட்சி அமைக்கவேண்டும் என்ற எமது கனவு கனவாகவே இருந்து விடும்போல் தெரிகின்றது

அதாவது சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் அமைப்பாளர்களும்
பதவிகளிலிருந்து  நீக்கப்பட்டுகொண்டிருக் கின்றனர்.இது கட்சியை பாரிய அளவில் பலவீனப்படுத்துமே தவிர எந்தவிதத்திலும் பலப்படுத்தப்போவதில்லை

அப்படிப்பார்க்கும்போது 2020 ஆம் ஆண்டு ஆட்சி அமைக்கும் எமது நோக்கம் நிறைவேறாமல் போய்விடும். இதன் காரணமாக நான் கடும் விரக்தியிலும் கவலை யிலும் இருக்கின்றேன்

கேள்வி:நீங்கள் மட்டும் விரக்தியில் இருக் கின்றீர்களா? அல்லது

பதில்: நான் மட்டுமல்ல, இன்னும் பலர் விரக்தியுடனும் அதிருப்தியுடனும் இருக்கின்றனர்
அதாவது பல சிரேஷ்ட உறுப்பினர்கள் இந்த அமைப்பாளர்கள் பதவி நீக்கம் குறித்து கவலையுடனேயே இருக்கின்றனர்

கேள்வி: அவ்வாறு விரக்தியில் இருக்கும் நீங்கள் அனைவரும் இணைந்து சுதந்தி ரக்கட்சியின் தலைவராக இருக்கும் அனாதிய தியுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் தானே

பதில்;கடும் கவலையில் இருக்கின்ற நான் உள்ளிட்ட சில சிரேஷ்ட உறுப்பினர்கள் இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றோம்.கட்சியை பலப்படுத்துவதன் அவசியத்தை நாங்கள் வலியுறுத்த இருக்கின்றோம்.இவ்வாறு தொடர்ச்சியாக சிரேஷ்ட அமைப்பாளர்களை கட்சியை விட்டு நீக்கினால் நாம் வெற்றிப்பாதையை நோக்கிப் பயணிக்க முடியாது என்பதை வலியுறுத்தவிருக்கின்றோம் என்றார்.
சுதந்திரக்கட்சியின் பல சிரேஸ்ட உறுப்பினர்கள் கடும் அதிருப்தியுடனும், விரக்தியுடனும் உள்ளனர்..  சுதந்திரக்கட்சியின் பல சிரேஸ்ட உறுப்பினர்கள் கடும் அதிருப்தியுடனும், விரக்தியுடனும் உள்ளனர்.. Reviewed by Madawala News on 10/17/2017 01:15:00 PM Rating: 5