Kidny

Kidny

ஜனாதிபதி என் மீது நம்பிக்கை வைத்திருக்கும் வரைக்கும் இந்த அமைச்சுப்பதவியை விட்டு வெளியேறமாட்டேன்.




அத்துடன் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை எதிர்க்கவேண்டும் என்பதற்கே என்மீது குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருகின்றன என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரி வித்தார். 

ஜனாதிபதியின் தேசிய உணவு பாதுகாப்பு புரட்சி வேலைத்திட்டத்தின் கீழ் நேற்று மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் இடம்பெற்ற மரம் நடும் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊட கங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்தும் கூறுகையில், தேர்தல்களை பின்போடுவதாக தெரி வித்து என்மீது குற்றச்சாட்டுக்கள் தெரிவிக் கப்படுகின்றன. 

அந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அடிப்படையற்றவை என நிரூபிக்கப்பட்டுள்ளன. குற்றம் சுமத்துப வர்கள் தொடர்ந்து ஒரே விடயத்தையே தெரிவித்து வருகின்றனர். 

அவர்களின் குறுகிய அரசியல் நோக்கத்துக்கே இவ்வாறு செயற்படுகின்றனர். மேலும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலும் கலைக்கப்பட்டிருக்கும் 3 மாகாண சபைகளுக்குமான தேர்தலை மார்ச் மாதத்திலும் நடத்துவோம். 

என்றாலும் எமது அர்ப்பணிப்பு தொடர்பாக அரசியல்வாதிகள் கதைப்பதில்லை. எதிர்க் கட்சியினர் என்மீது குற்றச்சாட்டு தெரிவிப்பதை நான் பிழையாக நினைக்கமாட்டேன். நாங்களும் எதிர்க்கட்சியில் இருந்திருப்பதால், அரசாங்கத்தை எதிர்க்கவேண்டும் என்பதற்காக அவர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வருவார்கள்.

இது சாதாரணவிடயம். அத்துடன் நாங்கள் தேர்தலுக்கு அச்சப்பட்டு தேர்தலை பிற்படுத்தவில்லை. தற்போது குற்றம் சுமத்துபவர்கள் அவர்களது காலத்தில் எல்லை நிர்ணய பணியை சரி யான முறையில் மேற்கொண்டிருந்தால் இந்த பாவத்தை நான் சுமக்கவேண்டியி ருக்க தேவையில்லை. 

அத்துடன் இந்த குற்றச்சாட்டுக்களை தெரிவித்துக்கொண்டு சிலர் ஶ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியை பிளவுப டுத்த திட்டமிட்டு வருகின்றனர். மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததுபோல், எமது கட்சி சலூன் கதவைப்போன்றது. யார் வேண்டு மானாலும் வரலாம், செல்லலாம். யாராலும் கட்சியை வீழ்த்த முடியாது. இதனை மஹிந்த ராஜபக்ஷவை சுற்றி இருப்பவர்கள் உணர்ந்து செயற்படவேண்டும்.
எனவே தேர்தலை பிற்படுத்துவதாக தெரிவித்து என்மீது யார் குற்றச்சாட்டு தெரிவித்தாலும் அதற்கு நான் அச்சப்படப் போவதில்லை. அத்துடன் ஜனாதிபதி என் மீது நம்பிக்கை வைத்திருக்கும் வரை இந்த அமைச்சுப்பதவியை விட்டு வெளியேறவும் மாட்டேன் என்றார்.
ஜனாதிபதி என் மீது நம்பிக்கை வைத்திருக்கும் வரைக்கும் இந்த அமைச்சுப்பதவியை விட்டு வெளியேறமாட்டேன்.  ஜனாதிபதி என் மீது நம்பிக்கை வைத்திருக்கும் வரைக்கும் இந்த அமைச்சுப்பதவியை விட்டு வெளியேறமாட்டேன். Reviewed by Madawala News on 10/07/2017 01:39:00 PM Rating: 5