Kidny

Kidny

கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமிக்கு தெற்காசியாவின் சிறந்த மத்திய வங்கி ஆளுநர் விருது


இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெற்காசியாவின் சிறந்த
மத்திய வங்கியின் ஆளுநராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
Global Capital Markets publication  என்ற வெளியீடே தெற்காசியாவின் சிறந்த மத்திய வங்கியின் ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமியை  தெரிவு செய்துள்ளது.

வாஷிங்டனில் நடைபெற்ற உலக வங்கி – சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த கூட்டத்தில் கலாநிதி. இந்திரஜித் குமாரசுவாமியின் இந்த விருது குறித்த அறிவிப்பு இடம்பெற்றதாக இலங்கை மத்திய வங்கி தெறிவித்துள்ளது.

தெற்காசியாவில் சர்வதேச மூலதன சந்தை தொடர்பில் செய்தி , கருத்துக்கள் தரவுகள் தொடர்பில் Global Capital Markets publication முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமிக்கு தெற்காசியாவின் சிறந்த மத்திய வங்கி ஆளுநர் விருது  கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமிக்கு தெற்காசியாவின் சிறந்த மத்திய வங்கி ஆளுநர் விருது Reviewed by Madawala News on 10/17/2017 08:10:00 AM Rating: 5