Kidny

Kidny

போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன ; மடவளை நியுசுக்கு கருத்து வெளியிட்ட DIG மஹிந்த ஏக்கநாயக்க


இன்று மாலை கம்பளை போதளப்பிடிய பகுதியில் அப்பிரதேச விகாரையின் பெரஹர செல்லும் போது கல் வீசி தாக்கியதாக
அங்கு சிறு பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது இந்த நிலையில் அப்பிரதேசத்திற்கு நேரடியாக சென்ற மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் மஹிந்த ஏகநாயக்க இரு தரப்பினருடன் கலந்துரையாடி நிலைமையை சீர் செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விபரம் அறிய நாம் பிரதி பொலிஸ் மா அதிபர் மஹிந்த ஏகநாயக்க அவர்களை தொடர்புகொண்டு கேட்டபோது ,

தற்போது அங்கு பதற்றம் எதுவும் இல்லையெனவும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மடவளை நியுசுக்கு குறிப்பிட்டார்.

மேலும் அப்பகுதியில் பொதுமக்கள் ஒன்றுகூடி நிற்பதை  தவிர்ந்து கொள்ளுமாறு அவர் வேண்டுகோள்விடுத்தார்.

பிரதி பொலிஸ்  மா அதிபர் இந்த விடயத்தை கையாண்ட விதம் குறித்து போதளபிடிய பிரதேசவாசிகள் தங்கள் மகிழ்சியை வெளிப்படுத்திய அதேவேளை தங்கள் நன்றிகளையும் தெரிவித்ததாக அங்கிருக்கும் சகோதரர் ஒருவர் குறிபிட்டார். 


போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன ; மடவளை நியுசுக்கு கருத்து வெளியிட்ட DIG மஹிந்த ஏக்கநாயக்க போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன ; மடவளை நியுசுக்கு கருத்து வெளியிட்ட DIG மஹிந்த ஏக்கநாயக்க Reviewed by Madawala News on 10/19/2017 11:50:00 PM Rating: 5