Kidny

Kidny

பிணந்தின்னிகளால் இலக்கு வைக்கப்படும் ரோஹிங்யா இளம் பெண்கள்..



ரோஹிங்யா அகதிகளிடையே நிலவும் பசி, பட்டினியைப் பாவித்து அவர்களை சில பிணந்தின்னிகள் பாலியல் தொழிலுக்கு
உட்படுத்தப்படுவதாக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

இவ்வாறு பாலியல் தொழிலுக்காக பாவிக்கப்படுகிறவர்களில் பலர் சிறுவயதினர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ள அதேவேளை மியன்மார் ரானுவம் பாரிய அளவில் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டுள்ளதாக பங்களாதேஷுக்கான நா வதிவிட பிரதிநிதி ரொபர்ட் வெட்கின்ஸ் குறிப்பிட்டுள்ளார.

மியன்மார் ராணுவம் பாலியல் வன்கொடுமையை ஒரு ஆயுதமாக பாவித்துவருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அதேவேளை கடந்த 1997 -2001 காலப்பகுதியில் மியன்மாரில் இடம்பெற்ற வன்முறைகளில் மியன்மார் ரானுவத்திற்கு எதிராக பல பாலியல் முறைப்பாடுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியன்மார் ராணுவம் மற்றும் அங்குள்ள காடையர்களின் பாலியல் கொடுமைகளை சந்தித்து அங்கிருந்து தப்பிவந்த ரோஹிங்யா பெண்கள் எல்லையில் மனித கடத்தலில் ஈடுபடும் குழுக்களின் அச்சுறுத்தல்களை சந்திக்க வேண்டியுள்ளதாக சமூக ஆர்வளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பிணந்தின்னிகளால் இலக்கு வைக்கப்படும் ரோஹிங்யா இளம் பெண்கள்..  பிணந்தின்னிகளால் இலக்கு வைக்கப்படும் ரோஹிங்யா இளம் பெண்கள்.. Reviewed by Madawala News on 10/24/2017 02:22:00 PM Rating: 5