Kidny

Kidny

பிபில நகரில் முஸ்லிம் வர்த்தர்கள் தாக்கப்பட்ட சம்பவ விபரம்


பிபில நகரில் முஸ்லிம் வர்த்தகர்கள் சிலர் நேற்றுதாக்கப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்துகிடைக்கும்
ஊர்ஜிதமான செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று முன்தினம் பிபிலை கொடிகமுவமுஸ்லிம் கிராமத்தில் முனீர் என்ற 35 வயது சகோதரர் திடீரென மாரடைப்பால்  மரணமடைந்துள்ளார்.

மரணமடைந்தவர் பிபிலை சுஹாரா எனும் வர்த்தக நிலையத்தின் உரிமையாளரும் பிபிலை நகர மற்றும் கொடிகமுவ மிஸ்பாஹ் பள்ளிவாசல் தலைவரும் பொது சேவைகளில் தன்னை அர்ப்பணித்தவரும் ஆவார்.

(அன்னாரை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக ..)

இவரது மரண செய்தியை கேள்வியுற்ற சிலபெரும்பான்மை இனத்தை சேர்ந்த வாலிபர்கள் சிலர் ஆரவாரமாக பட்டாசு கொளுத்தி சந்தோஷத்தை வெளிப்படுத்தியதோடு நின்று விடாமல்,

நேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் பிபிலை நகரில் வர்த்தக நிலையங்கள் மாத்திரமே உள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்களுக்குள் புகுந்த சிலர் பெரும்பான்மை வாலிபர்கள் பகிரங்கமாக தாக்கியுள்ளனர்.

இதன்போது முஸ்லிம் வர்த்தகர்கள் மிகவும் பொறுமை காத்துள்ளனர் .

இந்த சம்பவத்தில் மூன்று பேர்வரை தாக்கப்பட்டுள்ள  அதேவேளை தாக்குதல் காரணமாக காதில் இருந்து ரத்த கசிவு ஏற்பட்ட சகோதரர் ஒருவர் மொனராகலை சிரிகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

பிபிலை நகரில் சுமார் 30 க்கும் அதிகமான முஸ்லிம்கடைகள் உள்ள நிலையில் பெரும்பான்மை விஷமிகள் வர்த்தகர்களை தாக்கும் போதுதம்பிலாட்ட  ஆய் இடதென்னே நெஹ' கோஷமிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


சம்பவம் தொடர்பில் ஒரு பெரும்பான்மை இனத்தவர் ஒருவரை பொலிஸார்  கைது செய்துள்ளதாக அப்பகுதி முக்கிஸ்தர்கள் அஸ்வர் மௌலவி மற்றும் நளீம் ஆகியோர் மடவளை நியுசுக்கு குறிப்பிட்டனர்.

பிபில நகரில் முஸ்லிம் வர்த்தர்கள் தாக்கப்பட்ட சம்பவ விபரம்  பிபில நகரில் முஸ்லிம் வர்த்தர்கள் தாக்கப்பட்ட சம்பவ விபரம் Reviewed by Madawala News on 10/21/2017 12:05:00 PM Rating: 5