Ad Space avaiable

மஹிந்தவுக்கு இனிமேல் ஆட்சிக்கு வரவே முடியாது !



மகிந்த ராஜபக்‌ஷ தரப்பினால் ஒருபோதும் ஆட்சிக்கு வரமுடியாது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.


நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது அதற்கு பதில் அளித்த அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர் மகிந்த ராஜபக்‌ஷவினால் ஒருபோதும் ஆட்சிக்கு வரமுடியாது ஆனால் அவர் ஆட்சியை பிடிக்க கனவு கான்கிறார் என குறிப்பிட்டார்.


ஆனால் நீங்கள் பெஷில் ராஜபக்‌ஷவை பாராட்டியுள்ளீர்களே என ஊடகவியலாளர் கேட்ட போது அதற்கு பதில் அளித்த ராஜித ..


கடந்த அரசாங்கம் தோல்வி அடைந்தமைக்கு இனவாதமே காரணமாகியது.இனதவாதத்தை செய்தது கோத்தாவா பெசிலா என்பது உங்களுக்கு தெரியும் அதனை வைத்து புரிந்துகொள்ளுங்கள் என அவர் பதில்

அளித்தார்.

மஹிந்தவுக்கு இனிமேல் ஆட்சிக்கு வரவே முடியாது !  மஹிந்தவுக்கு இனிமேல் ஆட்சிக்கு வரவே முடியாது ! Reviewed by Madawala News on 10/12/2017 10:13:00 AM Rating: 5