Kidny

Kidny

கரையோர மாவட்ட கோரிக்கையை மு.கா. உண்மையில் சமர்ப்பித்ததா?



 
வடக்கு - கிழக்கு இணைப்பு, முஸ்லிம்களுக்கான உப தீர்வு பற்றிய இமாலய பிரச்சினைகள் ஒருபுறமிருக்க -
குறைந்தபட்சம் கரையோர மாவட்டத்தை கோரும் யோசனையாவது மு.கா. சார்பாக உத்தேச அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்படவில்லை. மக்கள் காங்கிரஸ் அதை பிரத்தியேக யோசனையாக முன்வைத்திருந்தது.

ஆயினும், வழிநடாத்தல் குழுவுக்கு முஸ்லிம் காங்கிரஸ் சமர்ப்பித்ததாகவும், ஆனால் அது பிரசுரிக்கப்படவில்லை என்றும் பிரதிதலைவர் எச்.எம்.எம். ஹரீஸ் ஊடகவியலாளர்களை சந்தித்த வேளையில் தெரிவித்திருந்தார். மு.கா.. தலைவர் ஹக்கீம் சமர்ப்பித்ததாக சொன்ன அறிக்கையையும் அவர் ஆதாரமாகக் காட்டியிருந்தார்.

இது தொடர்பாக  நான், வழிநடாத்தல் குழுவின் முக்கிய உறுப்பினரான ஜயம்பதி விக்கிரமரட்ண எம்.பி.யிடம் இன்று வினவினேன்.

”மு.கா. இவ்வாறான கோரிக்கை ஒன்றை முன்னர் ஒருதடவை முன்வைத்திருந்தது.ஆனால் இடைக்கால அறிக்கையை இற்றைப்படுத்தி அதனை பரிசீலித்துவிட்டு அதில் ஆட்சேபனைகள், உள்ளடக்க வேண்டிய விடயங்கள் எதுமிருந்தால் குழுவுக்கு தெரியப்படுத்துமாறு சொன்ன போது,  அவர்கள் கரையோர மாவட்ட யோசனையை முன்வைக்கவே இல்லை.”

ஒருவேளை அவர்கள் பழைய கோரிக்கையே இந்த அறிக்கையிலும் உள்ளடக்கப்படும் என நினைத்திருப்பார்களோ தெரியாது. அப்படியென்றால் இது விடயத்தில் தவறான புரிதல் ஏற்பட்டுள்ளது என்றே நினைக்கின்றேன்.எனவே அடுத்த இறுதி அறிக்கையில் இதை உள்வாங்குவது தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்றார்.

அறவே யோசனை எதுவும் சமர்ப்பிக்கவில்லை என்பதை விட இது கொஞ்சம் பரவாயில்லைதான். ஆனாலும் இவ்விடயம் அறிக்கையில் உள்வாங்கப்பட்டுள்ளதா என்பதை மு.கா. உறுதிப்படுத்தியிருக்க வேண்டும்.

கரையோர மாவட்டம் உண்மையாக தேவை என்ற உணர்வு இருந்தால், அது இற்றைப்படுத்தப்பட்ட அறிக்கையில் இலலை என அறியவரும்போது. உடனடியாக மு.கா. அதை மீளச் சமர்ப்பித்திருக்க வேண்டும்.

அதைவிட்டுவிட்டு, இப்போது இது பெரிய பிரச்சினையாகிவிட்டது, இதை வைத்து ஹரீஸ் மக்களிடையே செல்வாக்கு பெற்றுவிடலாம் என எண்ணியோ என்னவோ - 
மு.கா தலைவர் ஹக்கீம் பிரதமரை தொடர்புகொண்டு கரையோர மாவட்ட பைலை தூசு தட்டி எடுக்கச் செய்துள்ளதாக தெரிகின்றது.

#படுக்கையை நனைத்த சின்னப் புள்ள மாதிரி… எல்லாம் முடிந்த பிறகு தலைகுனிந்து - வெட்கித்து - கதைவிடும் அரசியல் முஸ்லிம்களுக்கு தேவையில்லை#
 
ஊடகவியலாளர் 
ஏ.எல்.நிப்றாஸின் முகநூலில் இருந்து..
கரையோர மாவட்ட கோரிக்கையை மு.கா. உண்மையில் சமர்ப்பித்ததா?  கரையோர மாவட்ட கோரிக்கையை மு.கா. உண்மையில் சமர்ப்பித்ததா? Reviewed by Madawala News on 10/04/2017 01:56:00 PM Rating: 5