Kidny

Kidny

இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கத்தின் தலைவராக எம்.ஏ. ஜப்பார் தெரிவு!



இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கத்தின் தலைவராக இப்பல்கலைக்கழகத்தின்
கலைகலாச்சார பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும் அரசியல் விஞ்ஞான சிரேஷ்ட விரிவுரையாளருமான எம்.. ஜப்பார் அவர்கள் 25.10.2017 புதன்கிழமை இப்பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் பெரும்பாண்மையான வாக்குகளைப் பெற்று வெற்றியுடன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரோடு போட்டியிட்ட கலாநிதி எம்.எச். நளீர் அவர்கள் 32 வாக்குகளையும் திரு எம்..ஜப்பார் அவர்கள் 54 வாக்குகளையும் பெற்று ஏராளமான விரிவுரையாளர்களின் அரவணைப்புடன் இப்பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

மேலும் இச்சங்கத்தின் செயலாளராகப் பொறியியல் பீடத்தின் பல்துறைத்திணைக்களத் தலைவரான பொறியியலாளர் எம்..இல்ஹாம் ஜெஸீல் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்

இவரோடு போட்டியிட்ட கடந்த ஆண்டிற்கான செயலாளராகவிருந்த ஆங்கில மொழி கற்பித்தல் பிரிவின் தலைவரும் ஆங்கில சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி .எம்.எம்.நவாஸ் அவர்கள் 32 வாக்குகளை மாத்திரம் பெற்றிருந்த வேளையில் பொறியிலாளர் எம்..இல்ஹாம் ஜெஸீல் அவர்கள் 56 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியது குறிப்பிடத்தக்கது

இச்சங்கத்தின் பிரதித் தலைவராக தமிழ்மொழி சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி .எஃப்.எம்.அஷ்ரப் அவர்களும், உதவிச் செயலாளராக நிதியியல் விரிவுரையாளர் .எல். சரீப்டீன் அவர்களும் பொருளாளராக சந்தைப்படுத்தல் முகாமைத்துவ சிரேஷ்ட விரிவுரையாளரும் இப்பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மற்றும் புத்துருவாக்கம் நிலையத்தின் ஆரம்ப இயக்குணர் கலாநிதி எம்.. முஜாஹித் ஹிலால் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

ஆசிரியர் சங்கத்தின் புதிய தலைவர் ஜப்பார் அவர்கள் உரையாற்றுகையில் தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள சங்கத்தின் நிருவாக உறுப்பினர்களது கட்டமைப்பானது இப்பல்கலைக்கழக ஆசிரியர் சமூகம் தற்போதுள்ள நிருவாகத்தின்மீது கொண்டுள்ள அதிருப்தியைக் கோடிட்டுக் காட்டுகின்றது என்று கூறிப் பல்கலைக்கழக சமூகம் மாற்றத்தை விரும்புகின்றதென்பதைப் பறைசாற்றுகின்றது என்றும் தெரிவித்தார்

மேலும், சமகாலத்தில் இப்பல்கலைக்கழகத்தில் கல்விசார் ஊழியர்களுக்கு இடம்பெறும் அநீதிகளையும் பாரபட்சங்களையும் சுட்டிக்காட்டிய அவர் இது போன்ற குறைபாடுகளைச் சம்பந்தப்பட்டவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இல்லாவிடில் உரிய முறையில் தொழிற்சங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் காட்டம் காட்டினார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சமூகம்,
இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கத்தின் தலைவராக எம்.ஏ. ஜப்பார் தெரிவு! இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கத்தின் தலைவராக எம்.ஏ. ஜப்பார் தெரிவு! Reviewed by Madawala News on 10/25/2017 11:17:00 PM Rating: 5